சேலம் 1.5 டன். சந்தன கட்டை கடத்த முண்ட 6.குற்றவாளிகளும் வனத்துறையினர் பிடித்து நீதிமன்ற நடுவர் அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்

சேலம் 1.5 டன். சந்தன கட்டை கடத்த முண்ட   6.குற்றவாளிகளும் வனத்துறையினர் பிடித்து நீதிமன்ற நடுவர் அவர்கள் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்...!!

சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல் IFS.
அறிவுறுத்தலின் பேரில் 

சேலம் மாவட்ட வன அலுவலர்தி .ஷஷாங் ரவி IFS, உத்தரவின் படி

சேலம் வனக்கோட்டத்தில் வன குற்றங்கள் நடைபெறாமல் இருக்க 

சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகம் 

சேலம் சேர்வராயன். வடக்கு வனச்சரகம் .
ஏற்காடு. 
மேட்டூர். 
வாழப்பாடி .
டேனிஷ்பேட்டை ஆகிய 6.  வன சரகங்களில்

அந்தந்த வனசரக அலுவலர்கள் மேற்பார்வையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் 

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 

சேலம் தெற்கு வனச்சரக அலுவலர் பெ.துரைமுருகன்  தலைமையில் வனவர்கள் சுரேஷ், மணிவண்ணன், பழனிவேல் மற்றும் வனக்காப்பாளர்கள் விஜயன், வெங்கடேஷ், முத்துராசு, அசோக்குமார், அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி, திருமுருகன், விஜயபாரதி மற்றும் வனத்துறை பணியாளர்கள் ஈரோட்டிலிருந்து சேலம் வரும் மகுடஞ்சவடி நெடுஞ்சாலை பகுதியில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர் . 

அப்போது சந்தேகத்திற்கு இடமாக அந்த வழியாக வந்த TATA Small Container (KL 11 AQ 2600) என்ற எண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தின் உள்ளே  சட்ட விரோதமாக கடத்தப்பட்டு துண்டுகளாக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகள் சுமார் 86 உரச்சாக்கு பைகளில் இருந்தது.

மேலும் மேற்கண்ட வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் கேரளா மாநிலத்தை சேர்ந்த 
1.முகமது சுகைல் S/O சுலைமான் வயது 34 மற்றும் வாகன உதவியாளர் 2. முகமது பசிலு ரகுமான் S/O ஹைத்ரூ வயது 26 ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திற்கு கைது செய்யப்பட்டு 

சரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இவர்களுடன் மேலும் நான்கு நபர்கள் வந்ததாகவும், இவர்கள் பிடிப்பட்டதும் நான்கு நபர்களும் அங்கிருந்து நான்கு சக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டாதாகவும் அளித்த தகவலின் பேரில் தீவிர தேடுதலில் மேற்கண்ட நபர்கள்   இருப்பிடம் அறியப்பட்டு பின்னர் ஈரோடு,பவானியில் உள்ள தனியார் ஹோட்டலில் நள்ளிரவில் வனச்சரக அலுவலர் பெ.துரைமுருகன்., தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த 3. முகமது மிசைல் S/O மொய்தின் குட்டி 4. முகமது அப்ரார் S/O முகமத் 5. பஜாஸ் S/O அபுபாக்கர் 6. உம்மர் S/O அப்துல்லாகுட்டி என்பது விசாரணையில் தெரியவந்தது.இக்குற்றத்திற்காக பயன்படுத்திய மற்றுமொரு வாகனமான Maruti Suzuki Swift (KL 10 DC 194) என்ற எண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இக்குற்றத்தில் பிடிபட்ட சந்தன மரக்கட்டைகள் சுமார் 1.5 டன்(15000Kg's) இருக்கும் எனவும் மேற்கண்ட ஆறு குற்றவாளிகளும் தாங்கள் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமுலம் அளித்ததன் பேரில்

 குற்றவாளிகள் குற்றவியல் நீதிமன்ற நடுவர்  அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️