தேசிய மாணவர் படையினர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்
2(TN) CTC NCC மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்
கோவை பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, தம்பு மேல்நிலைப்பள்ளி, ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி மற்றும் மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி NCC மாணவர்கள் மொத்தம் 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் N.பெரியசாமி , தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ரமேஷ், இயக்குனர் குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். 2 TN CTC NCC சேர்ந்த JCO முகேஷ் , குமார் , முருகன், UK சிங், ஜெய்சங்கர் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர். இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தின் முன்புறமுள்ள புதர்கள் அகற்றப்பட்டன. ரயில் நிலைய நடைமேடையின் மீதுள்ள முள் செடிகள் அகற்றப்பட்டு புதர்கள் அகற்றப்பட்டன. ரயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டன.
மேலும் ‘நம் இந்தியாவை நாம் தூய்மையாக வைத்துக் கொள்வோம்’ என்ற வகையில் மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கமாண்டிங் அதிகாரி தீபக் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்சிசி அலுவலர்கள் முனைவர் M.கார்த்திகேயன், M.M குணசேகரன், முனைவர் L.சின்னப்பராஜ், தேவதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். தூய்மைப் பணியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவர்களை ரயில் பயணிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️