முதுமலை புலிகள் காப்பகம் வனக்கோட்டத்தில் உள்ள
நீலகிரிவனக்கோட்டத்தில். காட்டு யானை. புலி. சிறுத்தை. கரடி. காட்டு மாடு. மான் என உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ஒரு சில மர்ம நபர்கள். இறைச்சிக்காக வன உயிரினங்களை வேட்டையாடி வந்த நிலையில். வனத்துறையினர் சில நபர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில்
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்.
D. வெங்கடேஷ். அறிவுறுத்தலின்படி
நீலகிரி வனகோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம்
கூடலூர் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு
ஆகியோர்களின் உத்தரவின்படி
கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில்
வன உயிரினங்கள் பாதுகாப்பு நலன் கருதியும். மற்றும் அரிய வகை மரங்கள் வெட்டாமல் தடுக்கவும்.
ஊட்டி வடக்கு வன சரக அலுவலர். சசிகுமார்.
கோத்தகிரி வனசர அலுவலர் செல்வராஜ்.
கீழ் கோத்தகிரி வனசரக அலுவலர். ராம் பிரசாத்.
குந்தா வன சரக அலுவலர் சீனிவாசன்.
நடுவட்டம் வனசரக அலுவலர் சரவணன்.
கூடலூர் வனசர அலுவலர் ராதாகிருஷ்ணன்.
மேலும்
அந்தந்த வனசரக அலுவலர்கள் மேற்பார்வையில்
வனவர்கள். வனக்காப்பாளர்கள் வனக்காவாளர்கள் . வேட்டை தடுப்பு காவலர்கள் என
தனி குழு அமைத்து இரவு. பகல். வாகன தணிக்கையில் ஈடுபட்டும்
வனப்பகுதியில் ஒட்டிஉள்ள தேயிலை தோட்டம். குடியிருப்பு பகுதிகளில். தீவிர ரோந்து பணிகள்
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில்
நடுவட்டம் வனசரகம் பகுதியில் கிடைத்த ரகசிய தகவலின் படி.
சில்வர் கிளவுட் தோட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடப்பட்டது தொடர்பாக
சோதனை செய்தனர்.
அப்பொழுது எஸ்டேட்டின் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருந்த பைசல் மற்றும் சாபுஜாக்கப் ஆகியோர். விசாரித்தன
இவர்கள் இருவரும் அல்லூர் வயல், 6 ஆம் நம்பர், கூடலூர் என்ற இடத்தில் உள்ள சஜீவன், என்பவருக்கு சொந்தமான எஸ்டேட் தோட்டத்தில் (சில்வர் கிளவுட் எஸ்டேட்டின் ஒரு சிறிய பகுதி) இருக்கும் குடியிருப்பில் தங்கி தோட்டத்தில் உள்ள வேலைகளை பார்த்து வருகிறார்கள்.
இருவரிடமும் தனித்தனியாக வனவிலங்குகள் வேட்டையாடுவதை குறித்து விசாரணை செய்யப்பட்ட பின்னர்
அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை செய்தபோது வீட்டுக் கட்டடத்தின் வாசற்படியின் அருகே மண்ணில் புதைத்து வைத்திருந்த ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து மேற்படி ஒற்றை குழல் துப்பாக்கிக்குரிய வெடிக்காத தோட்டாக்கள் 11 எண்ணிக்கை, வெடித்த தோட்டாக்கள் 2 எண்ணிக்கை, கத்தி, ரத்தக்கரை படிந்த கோடாரி, நெற்றி டார்ச் லைட், டார்ச் லைட், பர்ஸ் ஒன்று மற்றும் காற்று குழல் துப்பாக்கி ஒன்று ஆகியவற்றையும் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
இந்த எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி நடமாடும் என்பதால் வேட்டையாடுவதற்கு என்றும்
முதலாளி சஜீவனுக்கு நெருங்கிய இருப்பதால் கூறப்படுகிறது
மற்றும் தங்கள் எஸ்டேட்டிற்கு மேலாளர் போன்று செயல்பட்டு வரும் சுபைர் காக்காவிடம் துப்பாக்கி பற்றி பைசலால் கேட்கப்பட்டிருக்கிறது.
அவர் பாபா என்ற ஸ்ரீகுமார், தகப்பனார் பெயர் பெறவகுட்டி, புளியம்பாறை கிராமம், கூடலூர் என்பவரிடம் கள்ள நாட்டு துப்பாக்கி இருக்கிறது, நான் கூறியதாக ஸ்ரீகுமார் இடம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், பணத்தை நான் அவருக்கு கொடுத்துக் கொள்கிறேன் என்று சுபைர் பைசலிடம் கூறி இருக்கிறார். அதன்படி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் பைசல் பெற்று இருக்கிறார்.
சுமார் 4 மாதங்களுக்கு முன்பு சாபு ஜேக்கப் காபி தோட்டத்தில் நுழைந்த ஒரு சருகுமானை அந்த துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்.
அது இறந்துவிட்டது. அவர்கள் இருவரும் அந்த தோட்ட பகுதியிலேயே சருகுமானின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
மேலும் முதலாளி சஜீவன் எஸ்டேட்டில் கணக்கராக பணிபுரியும் பரமன் என்ற பரமசிவத்திடம் இவர்கள் இருவரின் அன்றாட தேவைக்கான டீசல் மற்றும் இதர செலவினங்களுக்கு பணம் பெற்றுக் கொள்வார்கள்.
மேலும் தோட்டாக்கள் தேவைப்படுகிறது என்றும் பரமசிவத்திடம் பைசல் கேட்டு இருக்கிறார். அவர் பத்து தோட்டாக்கள் வாங்கி கொடுத்திருக்கிறார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு காட்டுமாடு பாக்கு தோட்டத்தில் புகுந்ததை அறிந்து அன்று சாபு ஜேக்கப் இந்த துப்பாக்கியைக் கொண்டு சுட்டிருக்கிறார். பின் அவர்கள் இருவரும் இறந்த காட்டு மாட்டினை கைகோடாரி, சூரி கத்தி ஆகியவற்றை பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதற்கு தேவையான கறியை எடுத்துக்கொண்டு மீதி உள்ள காட்டு மாட்டின் உடல் பாகங்களை சாக்குப்பையில் போட்டு தோட்டத்தில் இருந்த bolero பிக்கப் வாகனத்தில் போட்டு தாங்கள் தங்கி இருந்து இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சில்வர் கிளவுட் எஸ்டேட் மறுபக்கத்தில் காப்பி தோட்டத்தின் புதர் பகுதியில் போட்டு இருக்கிறார்கள்.
அங்கு மாதிரிகள் மற்றும் பாகங்கள் வனத்துறையினர் சேகரம் செய்தனர்.
பின் சஜீவன், பரமன் மற்றும் ஶ்ரீகுமார் ஆகியோரை பிடிக்க குழுக்கள் அனுப்பப்பட்டது. பர்மன் பிடிபட்டார். ஶ்ரீகுமரன் மற்றும் சஜீவன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
பரமனை விசாரித்ததில் கடந்த 15 வருடங்களாக சஜீவன் என்பவரின் நீலகிரி பர்னிச்சர் கடையில் பாலிஷ் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் சஜீவனின் சில்வர் கிளவுட் எஸ்டேட்டில் வாங்கிய நிலத்தின் தொடர்பான கணக்குகளை தான் அவருக்காக பார்த்து வருவதாகவும், அந்த ஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் பைசல் மற்றும் ஷாப்ஜேக்கப் ஆகிய இருவரும் எஸ்டேட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க பணம் கேட்டால் அதை சஜீவனிடமிருந்து இருந்து வாங்கி கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு நாள் பைசல் தன்னிடம் வந்து சுபைர் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தை தொடர்ந்து ஒரு கள்ள துப்பாக்கி வாங்கி வைத்து இருப்பதாகவும், தற்பொழுது அந்த துப்பாக்கிக்கு தோட்டாக்கள் தேவைப்படுகிறது என்று தன்னிடம் கேட்டதாக தெரிவித்தார். அதற்கு அவர் பத்து தோட்டாக்கள் வாங்கி பைசலுக்கு கொடுத்ததாகவும் மற்றபடி தனக்கும் எஸ்டேட்டில் துப்பாக்கியை கொண்டு அவர்கள் வேட்டையாடிய சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை
என பரமன் தெரிவித்துள்ளார்.
நேற்றே கள்ள துப்பாக்கி கைப்பற்றப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான அறிவிப்பு கடிதமும் கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் க்கு நடுவட்டம் வனசரக அலுவலர் மூலம் அனுப்பப்பட்டது.
இந்த வனவிலங்கு வழக்கில் குற்றவாளிகளாக குற்றவாளிகளின்
பைசல்.சாபுஜாக்கோப்.
பரமன்.ஸ்ரீ குமார். சுபைர்.சஜீவன்
தற்போது தலைமறைவாக உள்ள சஜீவன், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோரை தேடும் பணியில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பைசல், சாகுஜேக்கப் மற்றும் பரமன் ஆகியோரை நீதி மன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டனர் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சி சார்ந்த அமைச்சர் உறவினர் மேடநாடு. தேயிலை தோட்டத்தில் விதிமுறைகள் மீறி சாலை அமைத்த போது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தும்
தற்போது . வன குற்றம் செய்த..முக்கிய பிரமுகர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு. செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
(சிங்கத்தை குகையிலே சந்திப்போம் என்று
பழ மொழிக்கு ஏற்ப) .
எந்த ஒரு அரசியல் கட்சினர் சிபாரிசு. ஏற்காமல். வன உயிரினங்களும் வன பரப்பளவை பாதுகாத்து வன குற்றங்கள் செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வரும்
வன பாதுகாவலர் டி.வெங்கடேஷ்.IFS
மாவட்ட வன அலுவலர் கௌதம்.IFS
கூடலூர் வனகோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு.IFS
ஆகியோர்களுக்கு
வன உயிரின ஆர்வலர்கள். இயற்கை ஆர்வாளர்கள் பாராட்டி நன்றி. தெரிவித்து வருகின்றனர்
🌳. கே.தமிழகம்சேட் ✍️