மேட்டுப்பாளையம்.குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது..

மேட்டுப்பாளையம்.
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது..



    கோவை.கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்" என்ற பழமொழிக் கொப்ப செல்வவனம் மலிந்த நாடாம், கொங்கு நாடு. இது கொங்கு என்ற சொல்லுக்கு பூந்தாது (மகரந்தம்) மனம் தேன் இன்பம், மகிழ்ச்சி, என்ற பல பொருள்கள் உண்டு. இப்பொருள்கள் எல்லாம் இங்கு அதிக அளவில் நிறைந்திருந்ததால் கொங்கு நாடு எனப்பெயர் பெற்றிருக்கிறது. 
இந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியான ஒடுவங்கநாட்டில் நான்கு மலைக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது குருந்தமலை எனும் ஸ்தலமாகும். குருந்து என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருளாகும். இச்சிறுங்குன்று 
என சிறந்து இருக்கும் குருந்தமலை என்னும் இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி என்னும் திருப்பெயர் கொண்டு வழிபடும் அன்பர்களின் வல்வினையை போக்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அருள் பாலித்து வருகிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, ராஜகம்பீர விநாயகர், கன்னிமூலவிநாயகர், பஞ்சாக்ஷர கணபதி, ஆறுமுக வேலவர், விஸ்வநாதர் விசாலாக்ஷி அம்மன். ஆதி மூலவர், அகத்தீஸ்வரர், இராஜநாக லிங்கம்,பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன். கடம்பன், வீரபாகு, ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள், விமானங்கள், மயில் மண்டபம், தீபஸ்தம்பம், கொடிமரம், ராஜகோபுரங்கள் ஆகியனவும் வர்ணம் தீட்டி, அனைத்து திருப்பணிகளும் நிறைவு செய்யப்பெற்று, நிகழும் மங்களகரமான, சோபக்ருது வருடம், உத்தராயணம், வைகாசி மாதம் 18 ஆம் நாள், (01.06.2023) வியாழக்கிழமை துவாதசி திதியும், சுவாதி நக்ஷத்திரமும், அம்ருதயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.45 மணிக்கு மேல் 08.45 மணிக்குள் அமைந்த மிதுன லக்னத்தில் முருகப்பொருமானின் திருவருளோடும் ஆறு கால யாகசாலை வழிபாட்டுடன் நடைபெற்றது


  கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மிகப் பழமையான பிரசித்தி பெற்ற குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் 12 ஆண்டுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் 32 யாக குண்டங்கள்,12 வேதிகைகள் அமைத்து யாகம் செய்தனர்.தொடர்ந்து ஐந்து கால யாக பூஜை நடைபெற்ற நிலையில் இன்று காலை ஆறாவது யாக பூஜை செய்த பிறகு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ராஜகோபுரம்,மூலவர்,பரிவார் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.

இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர்,ஆறுமுக வேலவர்,விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன்,ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார்,இடும்பன்,கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டது.

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கு கோபூஜை,தனபூஜை, அணுக்கை,மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம்,அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும்,அபிஷேக பூஜையும் நடைபெற்றது.இன்று மாலை திருக்கல்யாண உற்சவமும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் A.K. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் O.K. சின்னராஜ். T.R.S.
 சண்முகசுந்தரம். மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்...!

🌳 கே தமிழகம் சேட் ✍️