UNESCO விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் மற்றும் உயிர்க்கோள காப்பாளர் ஜகதீஷ் பகான் -க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு--!

💠 UNESCO விருது பெற்ற இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் மற்றும் உயிர்க்கோள காப்பாளர்  ஜகதீஷ் பகான் -க்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு--!
இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் காப்பாளர்  
ஜகதீஷ் பகான்  அவர்களுக்கு, UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான 'மைக்கேல் பட்டீஸ் விருது'க்குத் தேர்வாகி, 


தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்!

நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.

ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக. அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ராமநாதபுரம் உயிர்க்கோளகக் காப்பகத்தின்  காப்பாளர்
 ஜகதீஷ்பகான் I.F.S..
க்கு என் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.!



💠 முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்
 டி. வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில் 

துணை இயக்குனர்கள் வித்தியா. அருண்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் மசனகுடி வன சரக அலுவலர் பாலாஜி தெப்பக்காடு வனசரக அலுவலர் மனோஜ் குமார் மேற்பார்வையில்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மசனகுடி மரவக்கண்டி அணை கரையில் சுமார் 1500 மூங்கில் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. 

தெப்பக்காடு யானைக்கேம்ப்பாடி குழந்தைகளுக்கு பொருட்களின் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் பிளஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் கப்புகள், Ice stick போன்ற பொருட்களில் இருந்து மறு சுழற்சி முறையில் பூந்தொட்டிகள், விளையாட்டு பொருட்கள் செய்து மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் வனக்காப்பாளர்கள் வனகாவலர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்


💠 மேட்டுப்பாளையம் சிறுமுகை வன சரகம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 

ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில்

கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி


சிறுமுகை வன சரக அலுவலர் செந்தில்குமார். மேற்பார்வையில்

சிறுமுகை வன சரகத்தில் உள்ள 
பெள்ளேபாளையம் கிராமம், சிறுமுகை நால்ரோடு அருகில் கோவில் வளாகத்தில்  50 பல இன நாற்றுகள்
நடவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் வனவர்கள் கோபிநாத். வனக்காப்பாளர்கள். வன காவலர்கள்.
வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள்,ஊர்ப் பொதுமக்கள், Nature Lovers, சிறுமுகை, Rotary Club, சிறுமுகை மற்றும் SKARK foundation, சிறுமுகை ஆகிய தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உறுதிமொழி  ஏற்கப்பட்டது. 


 💠 மேட்டுப்பாளையம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 

 மேட்டுப்பாளையம் வன சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் 
வனவர் முனியாண்டி முன்னிலையில்


 சச்சிதானந்த பள்ளி வளாகத்தில்
 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து

 மரக்கன்றுகள் நட்டும், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும், பங்கேற்ப்பாளர்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சுற்றுச்சூழல் தொடர்பான உறுதிமொழி எடுத்தும் சிறப்பிக்கப்பட்டது...!



💠கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகங்களிலும் வனஉயிரின காப்பாளர் செல்வ. க. கார்த்திகேயனி, இ.வ.ப., மேற்பார்வையில் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சுற்றுச்சூழல் தினம்  கொண்டாடப்பட்டது


புவிக்கோளையும் அதன் இயற்கையையும் பாதுகாக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும்

வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு

வருகிறது. நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பெற்றிட, நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து, இயற்கை சமநிலையை பேணிகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5143 ச.கி.மீ ஆகும். இதில், ஒசூர்

வனக்கோட்டமானது 1501 ச.கி.மீ (29 %) பரப்பளவுடன் மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது.

இவ்வனப்பரப்பானது காவேரி, சின்னாறு, தென்பெண்ணையாறு மற்றும் தொட்டஹல்லா

ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக அமைந்து, பசுமையுடன் உள்ளது. இங்கு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயம் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசானது, பருவநிலை மாற்றங்களின் பாதிப்புகளில் இருந்து பூமியை காக்க, பூமியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, "மிஷன் லைப் (Mission LiFE)" என்ற செயல்

திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க,

மிஷன் லைப் திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் மற்றும்

சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒசூர் வனக்கோட்டத்தின் அனைத்து

சரகங்களிலும் கடந்த 13.05.2023 முதல் தற்போது வரை வனப்பகுதியில் செல்லும் சாலையோரம்,
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் போடப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்கள், இதர
தேவையற்ற பொருட்களை அகற்றியும், மிதிவண்டி பேரணி நடத்தியும், மஞ்சள் பைகள்

வழங்கியும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று, ஜூன் 5ஆம் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஓசூரில் கோகுல்நகர் பகுதியில் திரு. எஸ்.ஏ.சத்யா, ஒசூர் மாநகர மேயர் அவர்கள், வனஉயிரின காப்பாளர் செல்வ. க. கார்த்திகேயனி, இ.வ.ப., அவர்கள், ஒசூர் சார் ஆட்சியர் திருமதி. ஆர். சரண்யா, இ.ஆ.ப., ஒசூர் மாநகர துணைமேயர் திரு. சி. ஆனந்தய்யா, காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாபு பிரசாத், ஒசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் திரு. எம்.ராஜமாரியப்பன், ஓசூர் வனச்சரக அலுவலர் திரு. ஆர். பார்த்தசாரதி, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூர் வனக்கோட்டத்தில் அனைத்து

வனச்சரகங்களிலும் சுமார் 8000 மரக்கன்றுகளுக்கும் மேல் பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள்,

அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இலவசமாக வழங்கி நடவு செய்து உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேற்படி மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சித் தலைவர்கள், ஊர் பொதுமக்கள், சமூக

ஆர்வலர்கள் ஆகியோர் கவந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


🌳கே தமிழகம் சேட் ✍️