மேட்டுப்பாளையத்தில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது

மேட்டுப்பாளையத்தில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது 
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வாக்களிப்பதன் அவசியத்தை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்பதை வலியுறுத்தி 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது 

18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் ஜனநாயக கடமையின்படி வாக்களிக்க வேண்டும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய கட்டாயம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுதேவன் ஆலோசனின் பெயரில்  படிமேட்டுப்பாளையம் தேர்தல் துனை வட்டாச்சியர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற பேரணி மேட்டுப்பாளையம் 

கோவை சாலையில் கோ ஆப் காலனி பகுதியில் இருந்து தொடங்கியது ..
கிராம நிர்வாக அலுவலர் சி.ஆர். மூர்த்தி வரவேற்று பேசினார். அவர் உறுதி மொழியை வாசிக்க மெட்ரோ பள்ளி என் எஸ் எஸ் மாணவ மாணவிகள்,
   வி.என்.கே மகளிர் கலை அறிவியல்  , கல்லூரி என்.எஸ் .எஸ். மாணவியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் 
தொடர்ந்து கோ ஆப்பரேட்டிவ் காலனி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் மாணவ மாணவியர் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வந்தனர். 

பேரணி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது அங்கு தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் நில  வருவாய் ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு  துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
கிராம நிர்வாக அலுவலர்கள்  சி. மூர்த்தி, பஷீர், தனபால், செந்தில்குமார், மலர் மணி, லட்சுமி, மணி கண்டன் ,கார்த்திகேயன், ஹரிஹரசுதன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் தனசீலன் நன்றி கூறினார். 

🌳 கே தமிழகம் சேட்