புதிய தார் சாலை பணி துவக்கி வைத்தார் ஏ கே செல்வராஜ்MLAபழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

புதிய தார் சாலை பணி துவக்கி வைத்தார் 
ஏ கே செல்வராஜ்MLA
பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி...



மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிரா மங்களில் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீரை தேக்கி வைக்க காமராஜர் ஆட்சி காலத்தின் போது பில்லூர்  
அணை கட்டப்பட்டது. அப்போது, 60 ஆண்டுக - ளுக்கு முன் விளாமரத்தூர் பில்லூர் அணை பகுதிக்கு இடையே, தற்காலிகமாக . வனப்பகுதியில் கற்களால் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின் இச்சாலை முற்றிலும் சேதம் அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட் டது. இதனிடையே பில்லூர் அணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக் காகசுமார் 61 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல


வேண்டிய நிலை ஏற்பட் டது. இதையடுத்து, மேட் டுப்பாளையத்தில் இருந்து வனப்பத்திகாளியம்மன் கோவில் வழியாக நெல் லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமரத்தூர் பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு சுமார் எட்டரை கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையை மேம்படுத்தி தார் சாலை அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக விளாமரத்தூர் 
பகுதியில் இருந்து பில்லூர் அணை செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட் டர் தூரம், 
சுரங்கமற்றும் கனிமவளத்துறை சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு, தார் சாலை அமைப்பதற்கான முதல் கட்டப்பணி துவங்கப்பட் டது. 
இதற்கானபணியை  மேட்டுப்பாளையம்  சட்டமன்ற உறுப்பினர் .,  ஏ கே.செல்வராஜ்.MLA துவங்கி வைத்தார். 
தார் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளதால், 
அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். 
 இந்த நிகழ்ச்சியில்
முன்னாள்ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை_மகேந்திரன்*,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி செல்வி_நிர்மலா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம், காரமடை ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன், பழனிசாமி ஒப்பந்ததாரர் மோகன்ராஜ்*, காளிச்சாமி, ஊராட்சி செயலாளார் லட்சுமணன் மல்லன், செல்வன் முக்கிய பெரும் அவர்கள் மற்றும்   நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

🌳 கே தமிழகம் சேட் ✍️