தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் 11 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து சீருடை பணியாளர் தொழிற்சங்கத்தின் சார்பில் 11 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது..!! 


மேட்டுப்பாளையம் அருகே உள்ள காந்திநகர் கலைமஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
பேரவை கூட்டத்தில் 160 தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.  புதிய நிர்வாக கமிட்டியை சங்கப் பிரதிநிதிகள் தேர்வு செய்தனர் அதில் தலைவராக ஆர். குப்புசாமி, பொதுச் செயலாளராக என். கிருஷ்ணமூர்த்தி ,பொருளாளராக பி. சண்முகம், துணைச் செயலாளராக மோகன்ராஜ், உதவி தலைவராக குருசாமி ,நிர்வாகிகளாக கேபி சக்திவேல், எஸ் பூபாலன், ஈ.தங்கவேல் ,முருகேசன், முனி ராஜா ,பெருமாள், ஆர் .சிவகுமார், செல்வராஜ் ,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்


 கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன தமிழக அரசு மாநகரம் சென்னையில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி அளித்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் அரசு இயக்க வேண்டும் .
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். காண்ட்ராக்ட்
 முறையில் ஆள் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தேவைக்கேற்ப ஓட்டுநர் நடத்துனர், பணிமனை ஊழியர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நியமனம் செய்ய வேண்டும் .
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் 2500 கோடியை அரசே உடனே வழங்க வேண்டும்.
 ஓய்வு பெற்ற தொழிலாளருக்கு 10 ஆண்டு காலமாக பஞ்சப்படி நிறுத்தி வைத்திருப்பதை மேல் முறையீடு செய்து இழுத்தடிக்க வேண்டாம் அனைத்து நகரப்புற பேருந்துகளிலும் பெண் பயணிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை கண்டித்து இயக்கங்கள் நடத்துவது என ஆண்டு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

🌳 கே தமிழகம் சேட் ✍️