பாராளுமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் . தி.மு.க.காங்கிரஸ். கம்யூனிஸ்ட். விடுதலை சிறுத்தை. கொங்கு. இஸ்லாமியர்கள். மற்றும் இதர கட்சி. வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து
கழகப் பொதுச் செயலாளர் முதலமைச்சர்
மு க ஸ்டாலின் தலைமையில்
மகளிர் உரிமைத்தொகை இலவச பேருந்து பயணத்திட்டம். மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். விஜயகாந்த் கட்சி. எஸ். டி. பி. ஐ. மற்றும் இதர கட்சியுடன் முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச் செயலாளர். எடப்பாடி பழனிச்சாமி தங்களது ஆட்சியில் மக்களுக்கு பயன்பெறுகின்ற விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்ததை வலியுறுத்தி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
வாக்கு வங்கி உள்ள.பாட்டாளி மக்கள் கட்சி. அம்மா முன்னேற்ற கழகம். மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அமைத்து
இந்திய ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தி அண்ணாமலை மேற்பார்வையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
யார் என்ன சொன்னாலும் என்ன என் பாணி தனி என்று தனியாக தமிழ்நாடு முழுவதும் தனக்கென்ன ஓட்டு வங்கி வைத்துள்ள சீமான் தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் அந்தக் கட்சி கூட்டணியுடன் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிவித்தனர்
தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?
கன்னியாகுமரி*
காங்கிரஸ்-விஜய் வசந்த்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
திருநெல்வேலி*
காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்
பாஜக-நயினார் நாகேந்திரன்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா
தென்காசி*
திமுக-ராணி ஸ்ரீகுமார்
தமமுக-ஜான் பாண்டியன்
புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்
தூத்துக்குடி
திமுக-கனிமொழி
தமாகா-SDR.விஜயசீலன்
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
இராமநாதபுரம்*
ஐயுஎம்எல்-நவாஸ்கனி
ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
விருதுநகர்*
காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்
பாஜக-ராதிகா சரத்குமார்
தேமுதிக-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்
தேனி
திமுக-தங்க தமிழ்செல்வன்
அமமுக-TTV.தினகரன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்
மதுரை
மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்
பாஜக-ராம சீனிவாசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி
சிவகங்கை
காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்
இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி
தஞ்சாவூர்
திமுக-முரசொலி
பாஜக-முருகானந்தம்
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
பாஜக-ரமேஷ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா
மயிலாடுதுறை
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாமக-ஸ்டாலின்
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்
சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
பாஜக-கார்த்தியாயினி
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி
கடலூர்
காங்கிரஸ்-விஷ்னு பிரசாத்
பாமக-தங்கர் பச்சான்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்
பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
ஐ.ஜே.கே-பாரிவேந்தர்
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி
திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அமமுக-செந்தில்நாதன்
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
கரூர்
காங்கிரஸ்-ஜோதிமணி
பாஜக-செந்தில்நாதன்
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா
திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
பாமக-திலகபாமா
எஸ்.டி.பி.ஐ-முபாரக்
நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன்
பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
பாஜக-வசந்தராஜன்
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்
கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
பாஜக-K.அண்ணாமலை
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
நீலகிரி
திமுக-ஆ.ராசா
பாஜக-எல்.முருகன்
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்
திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
பாஜக-முருகானந்தம்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி
ஈரோடு
திமுக-பிரகாஷ்
தமாகா-விஜயகுமார்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்
நாமக்கல்
கொமதேக-மாதேஷ்வரன்
பாஜக-கே.பி.ராமலிங்கம்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி
சேலம்
திமுக-செல்வகணபதி
பாமக-அண்ணாத்துரை
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்
கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
பாமக-தேவதாஸ் உடையார்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்
விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
பாமக-முரளி சங்கர்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்
ஆரணி
திமுக-தரணி வேந்தன்
பாமக-கணேஷ்குமார்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
பாஜக-அஸ்வத்தாமன்
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு
தருமபுரி
திமுக-ஆ.மணி
பாமக-செளமியா அன்புமணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா
கிருஷ்ணகிரி
காங்கிரஸ்-கோபிநாத்
பாஜக-நரசிம்மன்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
பாமக-கே.பாலு
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
பாமக-ஜோதி வெங்கடேஷ்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
தமாகா-வேணு கோபால்
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
பாஜக-வினோஜ் செல்வம்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்
தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்செல்வி
வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
பாஜக-பால் கனகராஜ்
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி
திருவள்ளூர்
காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில்
பாஜக-பாலகணபதி
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
புதுச்சேரி
காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை
பாஜக-நமச்சிவாயம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா
மேற்கண்ட வேட்பாளர்களை அறிவித்த பின்னர் அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்கள் ஆட்சியில் நடந்த சாதனைகளையும் தங்களுடைய வாக்குறுதிகளை தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறனர்
இந்த நிலையில்
. கடந்த 2024 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதில் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்களைவிட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர்அதிகமாக உள்ளனர். 8 ஆயிரத்து 294 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்காளர்களாக உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் படி 40 முதல் 49 வயது வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். இதன் மூலம் 30 வயது முதல் 50 வயது உள்ள வாக்காளர்களே புதிய ஆட்சியை தீர்மானிக்கும் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 7 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்க போவது நடுத்தர வயது வாக்காளர்களா அல்லது இளம் வாக்காளர்களா என கேள்வி எழுந்தால், நிச்சயம் நடுத்தர வயது வாக்காளர்களே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள். ஏனென்றால் அந்த வயது வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. நடுத்தர வயது வாக்காளர்கள், தமிழ்நாட்டின் அமைதியான சமூக நல்லிணக்க அரசியல் போக்கை இந்தியா முழுமைக்கும் ஆக்க விரும்புகின்றனர்.
இந்தத் தேர்தலில் சென்னை முதல் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நானும் சேனாதிபதி இதழ் துணை ஆசிரியர் முத்தார். நேரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களையும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்தோம் அதில் புதிய வாக்காளர்கள் கூறுகையில்
சார் இளைஞர்களுக்கு நடுத்தர வயதினர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் 70 வயதில் இருந்து 80 வயதுக்கு மேல் உள்ள நபர்களை பாராளுமன்ற வேட்பாளராக சில கட்சிகள் அறிவித்துள்ளனர் இது எந்த விதத்தில் நியாயம் சார் என்று தங்களது குமரலை தெரிவித்தனர்
சார் எங்க தாத்தா. அப்பா. காலத்துல இருந்து நாங்கள் வானத்தில் இருக்கும் சின்னத்துக்கும் தரையில் இருக்கும் சின்னத்துக்கும் தான் வாக்களிப்போம் என்று உறுதியாக மகிழ்ச்சியாக பெரும்பாலும் கூறினார்கள் (ஓ இதுதான் ஓட்டு வங்கிய என நாம் புரிந்து கொண்டோம் )
ஆளுங்கட்சி. கூட்டணி பெரும்பாலும் இடத்தில் பலமாகவும் இருந்தாலும்
எதிர்க்கட்சி கூட்டணி ஒரு சில தொகுதியில் முன்னணியில் இருந்தாலும் பெரும்பால இடங்களில் கடும் போட்டியாக உள்ளது
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள். கோவை. திருநெல்வேலி. கன்னியாகுமரி. ராமநாதபுரம். தென்காசி. வேலூர். நீலகிரி. தர்மபுரி. தேனி. மற்றும் ஒரு சில பகுதியில் மோடி அலை இருப்பதால் கணிசமான ஓட்டுகள் பெறுவார்கள் மோடி. அலை தீவிரமாக இருந்தால் சில இடங்களை வெற்றியும் பெறுவார்கள்
இதனால்
தமிழ்நாடு ஆளுங்கட்சி கூட்டணி. எதிர்க்கட்சி கூட்டணி. சாதகமாக அல்லது பாதகமாக.எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.....?
🌳 கே தமிழகம் சேட் ✍️