நாமக்கல் உலக வன தினம் மற்றும் தண்ணீர் தினத்தை ஒட்டி மரங்களை நடுவோம்- தண்ணீரை பாதுகாத்து நீர் வளத்தை பெருக்க நம் அனைவரும் இந்நாளில் உறுதிமொழிஏற்போம் மாவட்ட வன அலுவலர் S.கலாநிதி IFS. மாணவர்கள் மத்தியில் சிறப்புரை...!

🌳 நாமக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் உலக வனநாள் முன்னிட்டு 
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி  வளாகத்தில் பல்வேறு மரக்கன்று நாற்றுக்களை 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.S. உமா, I.A.S. நற்று வைத்தார்

இதனைத் தொடர்ந்து

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் S.கலாநிதி.IFS 
மாணவ. 
மாணவர்கள் மத்தியில் பேசுகையில் 


காடுகளின் பயன்கள் என எடுத்து கொண்டால், புவிவெப்பமயமாவத்தை தடுக்கிறது, மழை தருகிறது, மண் அரிப்பை தடுக்கிறது, நமக்கு உணவு வழங்குகிறது, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது, காற்று மாசுபாட்டைக் குறைக்கின்றது, வன உயிரினங்கள் மற்றும் பழங்குடிகளை காக்கிறது, உணவு சங்கிலியை பாதுகாக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
உலக காடுகள்  வனம் செழித்தால். வளமாகும் தேசம். மேலும்

ஒவ்வொரு வருடமும் உலக தன்ணீர் தினம் மார்ச் 22 அன்று அனு சரிக்கப்படுகிறது. தண்ணீரை சேமிப்பதும், நீர் நிலைகளை பாதுகாப்பதுமே இந்த தினம் அனுசரிப்பதன் முக்கியமான நோக்கமாகும். வாழும் ஒவ்வொரு உயி ரினத்திற்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்றாகும். நமக்குக் குடிக்க, சமைக்க, சுத்தம் செய்ய மற்றும் குளிக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயம், தொழிற் சாலைகள் மற்றும் படகு, கப்பல் போக்குவரத்திற்கும் இந்த இயற்கை வளம் நமக்குத் தேவைப்படுகிறது. பூமியில் 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால்  அது `நீல கிரகம்’ என அழைக்கப்படுகிறது.  பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்தாலும் ஒரு சதவிகித அளவு தண்ணீர்தான் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. மீதியுள்ள தண்ணீரெல்லாம் கடலில் உப்புத் தண்ணீராகவோ அல்லது உறைந்த பனிக்கட்டிகளாகவோ உள்ளன.   மக்கள் தொகை அதிகரித்து வருவதால்  இந்த குறைவான அளவுள்ள நீர் வளத் திற்கான தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை என்கிற பிரச்சனை உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.
நாம் இதை விவேகத்துடன் பயன் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கச் சரியான நேரம் இது. அப்பொழுதுதான் எதிர்காலத்தில் ஒவ்வொருவருக்கும் இந்த அரிய வளம் போதுமான அளவிற்கு கிடைக்கும்.
மாணவர்களுக்கு காடுகள். தண்ணீர்.முக்கியத்துவம் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர் நிகழ்ச்சிகள் வனத்துறை செய்து வருகிறது காடு பரப்பளவு அதிகப்படுத்தும் நீர்நிலைகளைதூர் வாரி தண்ணீரை பாதுகாக்க.அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவிழாவில் 
உலக வன தினம்.மற்றும் தண்ணீர் தினம். மரங்களை நடுவோம்- நீர் வளத்தை.  பெருக்கவும்  தண்ணீரை பாதுகாத்து சேமித்து பயன்பெறுவோம் என
 நம் அனைவரும் 
இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்

மேலும்மாணவிய.மாணவர்கள் தினசரி தங்களது கல்லூரி. பள்ளி. படிப்பை முடித்த பின்பு மற்ற நேரங்களில் தங்களது லேப்டாப். மற்றும் செல்போனில் அறிவியல் சார்ந்த நல்ல பாடங்களை படித்தும் அரசு அறிவு சார்ந்த மையம் மற்றும் பொது நூல்களில் சென்று தினசரி பத்திரிக்கை ஊடங்களில் செய்திகள் மற்ற  வரலாறு. பொது அறிவு புத்தகங்களை படித்து தங்களின் திறனை மேம்படுத்தி. நம்பிக்கை விடாமுயற்சி மேற்கொண்டு. அரசு நடத்தும் வேலை வாய்ப்புகள்.  போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற தாங்கள்  இலக்கை நோக்கி திறன் பட செயல்பட வேண்டும் நீங்களும் வருங்காலத்தில் அனைவராலும் போற்றப்படக் கூடியவர்களாக திகழ வேண்டும் என்றார்

 என நாமக்கல் மாவட்ட வன அலுவலர் 
S.கலாநிதி IFS. மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார் 

இந்நிகழ்ச்சியில் வனசரக அலுவலர் பெருமாள். வனவர்கள் வனக்காப்பாளர்கள் வணக்கப்பாளர் வன காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள். கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவ. மாணவர்கள் கலந்து கொண்டனர்

🌳 கே தமிழகம் சேட் ✍️