குன்னூர் அருகே.காட்டுத் தீயை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் தீ யாய் பணியாற்றிய நீலகிரி மாவட்ட வன அலுவலர்கௌதம். IFS.க்குபொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டி நன்றியை. தெரிவித்து வருகிறனர் .. !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் ஊட்டி வனக்கோட்டம். கூடலூர் வனக்கோட்டம். முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலம். உள் மண்டலம் என வனக்கோட்டங்கள் உள்ளன இதில்  உயர்ந்த மரம் செடி கொடிகள் சோலைகள். நீரூற்று என இயற்கையாக அமைந்துள்ளது மேலும்

காட்டு யானை. புலி. சிறுத்தை. மான். காட்டு மாடு. பறவைகள்.
வன உயிரினங்கள் வாழ்ந்து வருகிறனர்
வனப்பகுதி காடுகளையும் வன உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் 

வனத்தீ தடுப்பு, மேலாண்மை  திட்டத்தின் கீழ் வனத்துறை செயல்படுத்தி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரம் வழங்குதல், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. - காட்டுத்தீ ஏற்படும் போது, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இப்பயிற்சி வாயிலாக காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் புதிய 'தொழில்நுட்ப உக்திகளை கையாளும் முறை.காட்டுத்தீ தடுப்பு ஆயத்தம் மற்றும், காட்டுத்தீயின் போது வன - விலங்குகளை பாதுகாக்க, .மீட்கும் வழிமுறைகள் - குறித்த பயிற்சி வழங்கி வருகிறன . மேலும் தீ தடுப்பு கோடுகளை அமைப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்கும் போதிய நிதி வழங்கி வருகிறது இதை  வனத்துறையினர் நடைமுறைப்படுத்தி வருகிறது

இந்த நிலையில்
 
நீலகிரி மாவட்டத்தில்
சமீப காலமாக இரவு வேளையில் அதிக பனிப்பொழிவும், பகல் வேளையில் அதிக வெயிலும் காணப்படுவதால் காட்டுக்குள் இருக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

குன்னூர். வண்டி சோலை. எடப்பள்ளி.  அடுத்த பாரஸ்ட்டேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது  

இந்த நிலையில் பாரஸ்ட்டேல் தோட்டத்தில் எரிக்கப்பட்ட குப்பையில் இருந்த தீக்கங்குகள் காற்றில் பறந்து 
வனகாட்டுப்பகுதிக்குள் விழுந்தன. 

தொடர்ந்து குன்னூர் காட்டுப்பகுதிகளில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. 
தீ மல மலவென பற்ற துவங்கியதில் அருகிலுள்ள வனப்பகுதியில் பரவியது இதில்  வனப்பகுதியில் இருந்த பழமையான  சாம்பிராணி மரங்கள், கற்பூர மரங்கள் அதிகம் எரிந்து ஏக்கர் கணக்கில்  நாசமாகின,

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற 

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் குன்னூர். வனத்துறையினர் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு வந்து 

பாரஸ்ட்டேல் காட்டுக்குள் பற்றியெரிந்த காட்டு த்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பாரஸ்ட்டேல்
காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த வனத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வந்த நிலையில் 

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும்பணி  முடுக்கிவிடப்பட்டது.

இதற்கிடையே குன்னூர் காட்டுத்தீயின் பாதிப்புகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர்  அருணா. 

முதுமலை புலிகள் காப்பக இயக்குனர்  வெங்கடேஷ். 

நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம்
 உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர்  

தொடர்ந்து அவர்கள் பாரஸ்ட் டேல், வண்டிச்சோலை பகுதியில் முகாமிட்டு வனத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

மேலும் காட்டுத்தியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள சென்னையிலிருந்து விரைந்து வந்த  முதன்மை வனத்துறை செயலாளர் 
திருமதி சுப்ரியா சாகு. சம்பவ  இடத்தில் 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா

வனத்துறை தலைவர் 
முனைவர் சுதாநாஷிகுப்தா. மற்றும் டோக்கரா

முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ்.

நீலகிரி வன கோட்ட வன அலுவலர் கௌதம்.

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக மேலாளர் அசோக் குமார்.

 கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்
 
குன்னூர் வனசரக அலுவலர் ரவீந்திரநாத்

ஆகியோர்களிடம் பரவும் காட்டுத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்த பின்னர் அறிவுரை வழங்கினார்
மேலும்

பாரஸ்ட் டேல் பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயை  அணைக்கும் பணியில்  

நீலகிரி வனகோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் மேற்பார்வையில் 

நீலகிரி.கோவை,  மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட  வனத்துறை ஊழியர்கள் தீயணைப்பு படை..சமூக ஆர்வலர்கள்  உள்ளிட்டோர் 

கொழுந்துவிட்டெரிந்த கட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர் மேலும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சி காட்டு தீயை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

இதற்கிடையே குன்னூர் தீவிபத்து தொட ர்பாக குன்னூர் வனசரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் வனக்குழுவினர் 
வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காட்டுத்தீ பரவ காரணமான தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீல பாண்டியன். 

மற்றும் சறுகளை தீப்பற்ற வைத்த ஊழியர்கள் கருப்பையா.மோகன்.  ஜெயக்குமார். ஆகிய நால்வரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

தற்போது மாவட்ட உதவி வன பாதுகாவலர். கிருபாகரா. வனசரக அலுவலர் ரவீந்திரநாத் மேற்பார்வையில் வனப்பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர். அந்தப் பகுதியில் தீ கனல் இருக்கிறதா என ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறனர் 

பாரஸ்ட் டேல் வனப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரவு. பகல் பாராமல். பல யூகங்கள் அமைத்து. புதிய தொழில்நுட்பம் வகுத்து வனப்பகுதியும் வன உயிரினங்களையும் நலன் பாதுகாத்த

தீ.யாய் பணியாற்றிய

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம்  IFS
மேற்பார்வையில்


வனவர்கள். வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள்.
வனபணியாளர்கள். மற்றும் தீயணைப்புத் துறையினர். தன்னார்வலர்கள். துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள். மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டி. நன்றியை தெரிவித்துள்ளனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️