தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63 அடியாக சரிந்துள்ளது.இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது.
இதனிடையே சிறுமுகை அருகே உள்ள. லிங்காபுரம். காந்தையூர். மொக்கை மேடு பகுதியைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது,வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது.
உற்றுப்பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்
இதனை அடுத்து
ஆனைமலை புலிகள் காப்பக (கோவை ) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில்
கோவை மாவட்டவன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன
மேலும் முதலையை கான அந்த பகுதி மக்கள் திரண்ட நிலையில் பொதுமக்களை அப்புறப்படுத்தி
விட்டு எவ்வித பாதிப்பும் இன்றி முதலையை வலையை. பயன்படுத்தி பிடிக்க வனத்துறை மேற்கொண்டனர்
முதலையை கயிறு, வலை ஆகியவற்றை பயன்படுத்தி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பிடிக்கச் சென்ற வனத்துறையினரை முதலை வாலால் தரையில் அடித்தது.
அதனால் வனத் துறையினரால் முதலையின் அருகே நெருங்க முடியவில்லை.
பின்னர் நாட்பகுதி விரித்தனர் முதலை வாயை பிடித்து கொண்டது.
பின் முதலையின் கண்களை மறைக்கும் விதமாக முதலையின் முகத்தில் சாக்கு போடப்பட்டன
பின். முதலையின் வாழ் கால்கள் கட்டப்பட்டன.
வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி முதலையை பத்திரமாக மீட்டனர்
பின்னர் பிடிபட்ட முதலை கூண்டு வைத்த வாகனம் வரவழைக்கப்பட்ட
பின்னர் கூத்தாமண்டி நீர்த்தேக்கப்பகுதியில் விட்டனர்.
இதனால் காந்தையூரில் 5மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது
தன் உயிரை பொறுப்பெடுத்தாமல்
முதலையை பத்திரமாக மீட்டு. நீர்த்தேக்க பகுதியில் கொண்டு விட்ட. . வனவர்கள் வனக்காப்பாளர்கள் வனகாவலர்கள். வனவேட்டை தடுப்பு காவலர்களுக்கு அப்பகுதி மக்கள். பாராட்டி நன்றியை தெரிவித்தனர்...!!
🌳 கே தமிழகம் சேட் ✍️