மேட்டுப்பாளையம் மகளிர் தினத்தை முன்னிட்டு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா கேக் வெட்டி.கடலை மிட்டாய் இனிப்பு வழங்கினார்

மேட்டுப்பாளையம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தையில் 78 கடைகள் செயல்பட்டு வருகிறது
 

அந்த வகையில், 
இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு   

உழவர் சந்தை நிர்வாக அலுவலர் 
ஷர்மிளா  கேக் வெட்டி.
மகளிர்க்கு கடலை மிட்டாய் இனிப்பு வழங்கினார் 

பின்னர்  பெண்களின். புரட்சியும். வளர்ச்சியும்.  சமுதாயத்திலும். குடும்பத்திலும். பெண்களின் பங்களிப்பு. பெருமைக்குரியது. போற்றுதலுக்குரியது. பெண்களின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பாராட்டினார். 
மேலும் அவர்  கூறுகையில்


மேட்டுப்பாளையம்,
அன்னூர், காரமடை, பெரிய நாயக்கன்பாளையம். நீலகிரி. உள்ளிட்ட பகுதிகளில் உள்ள - கிராமங்களில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து 
 விற்பனை செய்கின்றனர்.

தக்காளி, கத்திரிக்காய் புடலங்காய். தட்டப்பயிர். பீர்க்கங்காய். வாழைக்காய். பூசணிக்காய் பரங்கிக்காய். சுரக்காய் கொத்தவரங்காய். மாங்காய். தேங்காய். சேனைக்கிழங்கு. கருணைக்கிழங்கு. கொத்தமல்லித்தழை புதினாதலை. மரவள்ளி கிழங்கு .சர்க்கரை வள்ளிகிழங்கு. தானிய வகைகள்.கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டை கோஸ், கிளை முட்டைக்கோஸ்.
பிரக்கோலி. காலிபிளவர். பீனிஸ்.
 டபுள் பீன்ஸ். மேரா  காய்.பீட்ரூட், முள்ளங்கி. இஞ்சி. பூண்டு. உருளைக்கிழங்கு. பொன்னாங்கண்ணி. அகத்தி. சுகுட்டி. பாசிலை. முருங்கை. முடக்கத்தான்.
கீரைகள், கொய்யாப்பழம் சப்போட்டா. பப்பாளி.பழங்கள். மற்றும்பாரம்பரிய மூக்குத்தி அவரைகாய். சிறகு அவரைக்காய்.
மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறிகள் உள்ளிட்ட  70க்கும் மேற்பட்ட ரகங்கள் விற் பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள், வெளி மார்க்கெட்டுகளை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் கிடைப்பதாலும், 
தரமாக கிடைப்பதாலும், காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
கிராமங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் இதன் காரணமாக  விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து காய்கறிகளை வரத்து அதிகரித்துள்ளது.

அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளிமார்க்கெட்டுகளில் ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு 20% சதவீதமும் வாடிக்கையாளர்களுக்கு 15 சதவீதமும் லாபம் கிடைக்கும்.

இங்குள்ள கடைகளுக்கு இலவச மின் தராசு வங்கி வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது காய்கறி விதைகளும் கொடுக்கப்படுகிறது

கடந்த 20 22 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் வரையில்

20 ஆயிரத்து 593 விவசாயிகள் வருகை புரிந்துள்ளனர் அவர்கள் வாயிலாக விற்பனைக்கு 86 லட்சத்து 69 ஆயிரத்து 200 மெட்ரிக்டன் காய்கறிகள் வரத்து வந்துள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூ 29. 84 கோடியாகும் 11 லட்சத்தி 55 ஆயிரத்து 906 வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்

அதேபோல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை 19 ஆயிரத்து 670 விவசாயிகள் வருகை புரிந்துள்ளனர் அவர்கள் வாயிலாக விற்பனைக்கு 88  லட்சத்து 68, ஆயிரத்து 60 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து வந்துள்ளது.

இதன் மதிப்பு சுமார் ரூபாய் 3 6. 62 கோடிஆகும் 11 லட்சத்து 81 ஆயிரத்து 769 வாடிக்கையாளர்கள் வருகை புரிந்துள்ளனர் இவ்வாறு 
மேட்டுப்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஷர்மிளா கூறினார்.
உழவர் சந்தை சுற்று சுவர்களில்  காய்கறிகள் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி வர்ணம் பூசி எழுதப்பட்ட வாசகங்கள் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது மேலும் அனைத்து காய்கறிகளும் உழவர் சந்தையில் கிடைப்பதால் எங்களுக்கு பயனாகவும். மகிழ்ச்சியாக உள்ளது என்று காய்கறிகள் நல விரும்பிகள் கூறினார்கள்.

🌳 கே தமிழகம் சேட் ✍️