கல்லர் ஆதிவாசி மக்களுக்கு மண் வெட்டி மற்றும் மண்புழு உரம் தயாரிக்க உபகரணங்கள் ஆகியவற்றை வனக்கல்லூரி முதல்வர் முனைவர் அ.பாலசுப்ரமணியம் வழங்கினார்


மேட்டுப்பாளையம் கல்லாறு ஆதிவாசி மக்களுக்கு வாழ்வாதார முன்னேற்றத் திட்டம் ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் .
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சாத்திய பயிர்கள் பயன்பாடு தாவர மரபணு வளங்களின் தேசிய பணியகம் இணைந்து மலைவாழ் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத் திட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் 

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை ஊராட்சி கல்லாறு ஆதிவாசி காலனியில் நடைபெற்றது.
வனக்கல்லூரி முதல்வர் முனைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் 

வனமரபியல் மற்றும் மரம் மேம்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் இரா ரேவதி.
வரவேற்று பேசினார். 

மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்

 நிகழ்ச்சியில் ஆதிவாசி மக்களுக்கு மண் வெட்டி மற்றும் மண்புழு உரம் தயாரிக்க உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி வனக்கல்லூரி முதல்வர் முனைவர் பாலசுப்ரமணியம் வழங்கி  சிறப்பு உரையாற்றினார் 
நிகழ்ச்சியில் ஏராளமான ஆதிவாசி மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர் .


முடிவில் 
வனயில். வன மரபியல் மற்றும் மேம்பாட்டு துறை பேராசிரியர் முனைவர்
க. இரா. ரமேஷ் 
நன்றிகூறினார்.
 

🌳 கே தமிழகம் சேட் ✍️