ஈரோடு - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய 40 வயது பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம் வன சரகத்தில் காட்டு யானை புலி. சிறுத்தை. மேலும்  ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 

இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள ஆசனூர். பண்ணாரி. சாலையில் சர்வ சாதரணமாக நடமாடி வருகிறது. மேலும் அவ்வப்போது கரும்பு லாரிகள் வழி  மறித்து கரும்புகளை உட்கொள்ளும் யானைகள் சில நேரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும்

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில்  ராஜன் நகர் செல்லும் சாலையின்  சுமார் 10 மீட்டர் அருகே வடவள்ளி பீட் காப்பு காட்டுக்குள் நேற்று இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. 

அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.
இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. 

யானை சத்தம் கேட்டு சாலையில் செல்பவர்கள் பொதுமக்கள்  ஓடி வந்து பார்த்தனர். 

பின்னர் இதுகுறித்து
வனத்துறைக்கு  தகவல் கொடுத்தனர்

இதனை அடுத்து
 
சத்தியமங்கலம் புலிகள் காப்பக (ஈரோடு) கள இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஸ் 
உத்தரவின் படி

சத்தியமங்கலம் வன பணியாளர்கள் மேற்பார்வையில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம்

ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன்
  
முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மருத்துவ குழு ஆகியோர்கள் 

சம்பவ இடத்திற்கு 
வந்த  குழுவினர் 
தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்து றையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. 
2 மாதமே ஆன குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருகிறது. 

பண்ணாரி-பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று வாகனங்களில் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் ஒரு குழியை தோண்டி அந்தக் குழிக்குள் குட்டி யானையை வைத்து பராமரித்து வருகின்றனர்.

குட்டி யானைக்கு பால் மற்றும். இளநீர். தண்ணீர் வழங்கி வருகின்றனர். 
தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 

தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️