காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்.
சங்கு,சேகண்டி முழங்க கோவிந்தா,கோவிந்தா கோஷம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்ட ம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்
தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுயம்புலவாக தோன்றிய அரங்கநாத பெருமாள் இங்குசுயம் பல ஆண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களை காத்து வருகிறார்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த
அன்னை ரஙகநாயகி தாயார், ஆண்டாள் உடனமர் அரங்கநாதர் இங்கு குடிகொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்தன்று தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டின் மாசி மக தேர்த்திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து காரமடை அரங்கநாத பெருமான் தினந்தோறும் அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம்,அனுமந்த வாகனம்,கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பல்லக்கில் எழுந்தருளி திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீஅரங்கநாதர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.தொடர்ந்து அன்றிரவு யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.
இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை சரியாக 5 மணி அளவில் துவங்கியது. முன்னதாக தேரோட்டத்தை ஒட்டி அரங்கநாத பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அதிகாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற திருத்தேரோட்டத்தில்
கோவை,திருப்பூர், நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தாசர்களின் சங்கு,சேகண்டி முழங்க, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர், திருத்தேரானது 4 மாட வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக தேர் நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் ரமேஷ், காரமடை ரங்கநாதர் கோயில் செயல் அலுவலர் லோகநாதன், சட்டமன்ற உறுப்பினர்
ஏ. கே. செல்வராஜ்.
திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், உறுப்பினர்கள் எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன்,சுஜாதா ஜவஹர்,குணசேகரன்,
கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம்,சுரேந்திரன்,காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ்,திமுக காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், வடக்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராமுகுட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து
காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவில் பந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது கோவை சரவணம்பட்டியை சேர்ந்த தாசர்கள் 12 அடி உயர மெகா பந்தத்தை ஏந்தியவாறு மேள தாளத்துடன் ஆடி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் சிறப்பு
கோவை மாவட்ட ம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுயம்புலவாக தோன்றிய அரங்கநாத பெருமாள் இங்குசுயம் பல ஆண்டு காலமாக வீற்றிருந்து பக்தர்களை காத்து வருகிறார்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த
அன்னை ரஙகநாயகி தாயார், ஆண்டாள் உடனமர் அரங்கநாதர் இங்கு குடிகொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இத்திருக்கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் திருத்தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக மாசிமகத் தேரோட்டம்
நடைபெறுகிறது. நடைபெற்றது
கோவை யிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள இத்திருத்தலம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாகும். அன்னை ரஙகநாயகி தாயார், ஆண்டாள் உடனமர் அரங்கநாதர் இங்கு குடிகொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இப்பகுதியில் முற்காலத்தில் காரைச் செடிகள் மிகுந்து காணப்பட்டன. மாதம் மும்மாரி பெய்ததால் இங்கு நீர் மடைகளும் நிறைந்தே காணப்பட்டன. காரை செடிகள் நிறைந்திருந்ததால் இது காரமடை என அழைக்கப்படுகி றது. அக்காலத்தில் காரை புற்கள் நிறைந்திருந்த இப்பகு தியில் கொல்லத் தொட்டியார் என்ற இனத்தினர் காராம் பசுக்களை மேய்த்து ஜீவனம் செய்து வந்தனர். இந்நிலை யில் தினமும் நிறைய பால் கொடுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த காராம் பசு ஒன்று பால்வற்றியிருந்ததை கண்ட தொட்டியான் அதற்கான காரணத்தை அறிய முற்பட் டார். ஒருநாள் அந்த பசுவை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, அது தினமும் அருகிலுள்ள காரை புத ருக்கு சென்று பால் சுரந்ததைக் கண்டறிந்தாராம். இதை யடுத்து மனம் வெதும்பிய தொட்டியான் தன் கையில் வைத்திருந்த கொடுவாளால் அந்த புதரை வெட்டினா ராம்.அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாம். இதையடுத்து அவருக்கு இரு கண்களிலும் பார்வை பறி போனதாம். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அவரது உறவினர்கள் சென்று பார்த்தபோது, தொட்டியான் வெட்டியதில் ரத்தம் வந்த இடத்தில்
கோயில் கட்டி வணங்குமாறு அருள்வாக்கு வந்துள்ளது.
அதன் பின்னரே தொட்டியானுக்கு கண் பார்வை
கிடைத்ததாம். இதன் பின் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த அங்கு சந்தனக் காப்பிட்டு பார்த்த
போது, அங்கு சங்கு சக்கரதாரி பெருமாள் காட்சியளித்
துள்ளார்.
இன்றும் திருக்கோயில் வளாகத்தில் வெட்டப்பட்ட இடத்தில் காயத்துடன் சுயம்பு வடிவில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
கோவையை ஆண்ட மதுரை மன்னன் திருமலை நாயக்கர் தன் பரிவரங்களுடன் கோவையில் முகாமிட்டு இருந்தார். அப்போது அவருக்கு ராஜபிளவை நோய் வந்ததாம் காரமடை அரங்கநாதர் பெருமாளை வழிபட்டு அவர் நோயிலிருந்து குணமடைந்தாராம் அதற்கு நன்றி கடனாக அவர் கற்களால் கோயில் கட்டி பெருமாளுக்கு திருக்குட நன்னீராட்டு நடத்தினாராம் அதைத்தொடர்ந்து திருக்கோயில் 1982 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது 2005 இல் துவங்கப்பட்ட ஏழு நிலை ராஜகோபுரம் பணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு பின்னர் முடிக்கப்பட்டு.
2015 ஜூனில் திருக்குட நன்னீராட்டு விழா செய்து வைக்கப்பட்டது இத்துறை கோயில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது
காரமடை அரங்கநாத பெருமாளின் சக்தியை வெளிப்படுத்துவதற்காக மற்றொரு சம்பவம் கூறப்படுகிறது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவையில் இருந்து காரமடை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது வந்தது அப்போது ஆங்கிலேயே பொறியாளர் ஒருவர் யார் கூறியும் கேளாமல் ரயில் பாதையை கோவில் வழியாக அமைக்க திட்டமிட்டு மதிப்பீடு செய்து வந்தாராம் இந்நிலையில் ஒரு நாள் அந்தப் பொறியாளர் உறங்கும் போது கனவில் வெள்ளை குதிரையில் ஏறி கோபத்துடன் வந்த அரங்கநாத பெருமாள் அவரை இரு முறை சாட்டையால் அடித்தாராம். இதனை அடுத்து தனது தவறை உணர்ந்த அந்த பொறியாளர் உடனே அந்த ரயில் பாதையை வேற வழியில் மாற்றி அமைத்தாராம் அத்துடன் தான் செய்த தவறுக்கு பிரார்த்தித்தமாக வெள்ள குதிரை வாகனத்தையும் கோவிலுக்கு அன்பளிப்பாக செய்து கொடுத்தாராம்
இத்தகைய சிறப்பு மிக்க இத்திருத்த லத்தில் மூலவருக்கு வலதுபுறம் ரங்க நாயகி தாயாரும், இடதுபுறம் ஆண்டாளும் சன்னிதி கொண்டுள்ளனர்.
கோயிலின் முன்புறம் நெடிதுயர்ந்த கொடி மரம் காட்சியளிக்கிறது. கோயிலின் இடதுபுற மூலையில் தல விருட்சமாக 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காரை மரம் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பேறு அடைவார்கள் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் உள்ள ராமபாணம் எனும் ஆயுதம் பேய், பில்லி-சூனியங்களை அகற்ற கூடியதாக உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர் கள் அந்த மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பேறு அடைவார்கள் என்பது நம்பிக்கை.
முன் மண் டபத்தில் பெருமாளின் சேவகர்கள் எனப்படும் தாசர் கள் அமர்ந்து ஆசி வழங்குகின்றனர். இங்கு நடைபெ றும் பந்த சேவை, தண்ணீர் சேவை, கவாள சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை மனதார செய்யும் பக்தர்க ளுக்கு நினைத்த காரியம் கைகூடும் என்பது இக்கோயி லின் தனிச் சிறப்பு. இத்திருக்கோயிலுக்கென தனியாக தெப்பக்குளமும் உள்ளது.
சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசியன்று
பரமபதவாசல் திறக்கும் வைபவம் இங்கு விமரிசையாக நடைபெறும். அன்று பக்தர்களுக்காக நாள் முழுவ தும் கோயில் நடை திறந்திருக்கும்.
🌳 கே தமிழகம் சேட் ✍️