தமிழ்நாடு வனத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக வனப்பணிபுரிந்த வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மற்றும் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்
தமிழக வனத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் வனக்காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
தமிழக வனத்துறையில் வனவர், வனச்சரகர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிப்பது, வனத்தை விட்டு வெளியே வரும் யானை போன்ற விலங்குகளை மீண்டும் வனத்துக்குள் பாதுகாப்பாக அனுப்புவது, வனவிலங்குகள் மீட்பு பணி, விலங்குகள் கணக்கெடுப்பு உட்பட வனத்தை சார்ந்த அனைத்து பணிகளையும் வனக்காப்பாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக தங்கள் பணியை நிறைவு செய்ததும், வனவராக பதவி உயர்வு வழங்கப்படுகிறத
சுமார் 300-க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள், பதவி உயர்வுக்காக காத்திருந்த போது கடந்த 2022-ல் 150 வனக்காப்பாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கபடவில்லை. அதில் பெரும்பாலானோர் 50 வயதை கடந்தவர்கள். சிலர் ஓய்வு பெறும் வயதை எட்டிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பணிக்காலத்தில் கிடைக்கும் ஒரே ஒரு பதவி உயர்வும் தற்போது கிடைக்குமா என்ற அச்சத்தில் இருந்தனர் எனவே, 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த வனக்காப்பாளர்களுக்கு, வனவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
வனத்துறை விதிகளின் படி, 8 ஆண்டுகள் வனக்காப்பாளர்களாக பணி மற்றும் வனவியல் கல்லூரியில் 6 மாதம் பயிற்சி முடித்ததும், குற்றத்தாள்கள் ஏதும் இல்லாதபட்சத்தில் வனவராக பதவி உயர்வு வழங்கலாம். கடந்த 2020, 2021-ல் கரோனா காலத்தில் வனக்காப்பாளர்களுக்கு, வனவராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2022-ல் பாதி பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது
அமைச்சு பணியில் இளநிலை உதவியாளராக 2017 ஆம் ஆண்டு சேர்ந்தவர்கள் வரை வனவராக பதவி உயர்வு அளிக்க பட்டுள்ளது. ஆனால் சீருடை பணியாளர்களுக்கு 12 ஆண்டுகளாகியும் பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது பல இன்னல்களுக்கு நடுவே வனத்தை பாதுகாக்கும் அவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்துக் கொண்டுள்ளது
ஒரே துறையில் ஒரே பணிக்கு இரண்டு விதமான பதவி உயர்வு விதிமுறைகள் பின்பற்றுவது குழப்பத்தை விளைவிக்கிறது . ஆதலால் கடைசியாக இந்த ஆண்டாவது அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கு முன்பாக பதவி உயர்வு கிடைக்குமா---? இல்லை
எப்போதும் போலாக பதவி உயர்வு கானல் நீராக இருக்குமா என்று எதிர்பார்ப்பில் இருந்தனர் .
ஆகையால் வனக்காப்பாளர்கள் பதவி உயர்வு தமிழக முதலமைச்சர்.
மு க ஸ்டாலின். வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்
வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர். திருமதி சுப்ரியா சாகு.
தமிழ்நாடுவனத்துறையின் முதன்மை தலைமைப் வனத்துறை பாதுகாவலர் சுப்ரத்மெஹாபத்ரா
கூடுதல் தலைமை வன பாதுகாவலர் அட்மின்.
தொபஷ்ஜனா
மற்றும்
வனத்துறை உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தன
இந்தக் கோரிக்கையை செய்திகள் வெளியிட்டிருந்தோம்
இது தொடர்ந்து பல ஆண்டுகளாக வனக்காப்பாளராக பணியாற்றி வந்தவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் 97 நபர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனக்காப்பாளர்கள் இருந்து பணி உயர்வு பெற்று தற்போது வனவர்கள் யாக பல்வேறு மாவட்டத்திற்கு
பணி நியமன
ஆணை பிறப்பிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் வனவர்கள் பொறுப்பு ஏற்று கொண்ட அவர்கள் தமிழக முதலமைச்சருக்கும்
வனத்துறை அமைச்சர்
வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும்
தமிழ்நாடுவனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
கீழக்கரை பாக்கர் தலைமை நிருபர்
🌳 கே தமிழகம் சேட் ✍️