நீலகிரி வனக்கோட்டத்தில் பைக்காரா அணையின் ஓரம் பெண் புலி இறந்துள்ளது வனத்துறையினர் விசாரணை--!!

நீலகிரி வனக்கோட்டத்தில் பைக்காரா அணையின் ஓரம் பெண் புலி இறந்துள்ளது  வனத்துறையினர் விசாரணை--!!


நீலகிரி வனக்கோட்டம் பைக்காரா வனசரக அலுவலர் சரவணன் தலைமையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முக்குருத்தி 
லேக் ஒதுக்குக்காடு, பைக்காரா அணையின் ஓரம் ஒரு பெண் புலி  இறந்துள்ளது கண்டறியப்பட்டது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ். 

நீலகிரி மாவட்ட ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் சம்பந்தபட்ட பகுதியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் மற்றும் வனசரக அலுவலர் சரவணன் மற்றும் வன பணியாளர்கள் தணிக்கை செய்து ஆய்வு மேற்கொண்டதில் இறந்த புலியின் உடளில் காயங்களோ பிற அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து 
நாளை  முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் D.வெங்கடேஷ். IFS 

நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் IFS 
ஆகியோர்கள் முன்னிலையில் 

முதுமலை புலிகள் காப்பக, கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்.  
NTCA வழிகாட்டுதலின் படி  பிரேத பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளது என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️