சீருடைப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு முகாம் வடக்கு மண்டலம் 127 பேர்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது...!

சீருடைப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு முகாம் வடக்கு மண்டலம் 127 பேர்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீபணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்

துரையில் பணிபுரியும் ஆளிதர்கள் மற்றும் அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு தனியார்
துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு, I.P.S.அவர்களின் உத்தரவின் பேரில் 

காவல்துறை இயக்குனர் (நலன்) முனைவர் கருணாசாகர்,I.P.S. அவர்களின் வழிகாட்டுதலின்படி. வேலைவாய்ப்பு பற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமை, தமிழ்தாழ் திறன் மேம்பாட்டுத் கழகம். இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் வேலைமாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து தமிழகத்தின் வடக்கு மண்டலத்திலுள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்னூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய பத்து மாவட்டங்களிலுள்ள, தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளில் பணிபுரியும் ஆளிநர்களின் வாரிசுதாரர்களுக்கு. 20.03.2023 மற்றும் 21.03.2023 ஆகிய இரண்டு நேதிகளில் வேலைளப்ப்பு மகனம் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ்வேலைவாய்ப்பு முகாபில் காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த 230 நபர்கள். சிறைத்துறை குடும்பத்தைச் சேர்த்த 31 நபர்கள், தீபணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை குடும்பத்தைச் சேர்ந்த 18 நபர்கள், ஆக மொத்தம் 279 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் காளல்துறை குடும்பத்தைச் சேர்ந்த 102 நபர்கள், சிறைத்துறை குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்கள், தீணையப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை குடும்பத்தை சார்ந்த 8 தபர்கள், ஆக பொத்தம் 127 நபர்கள் பணிதியமணம் செய்யப்பட (For Appointment) தேர்வு செய்யப்பட்டனர்.

காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த 106 நபர்கள். சிறைத்துறை குடும்பத்தைச் சேர்ந்து 14 தபர்கள், தீபணைப்பு மற்றம் மீட்புப்பணிகள் துறை குடும்பத்தைச் சேர்ந்த 09 நபர்கள் என மொத்தம் 129 நபர்கள் அடித்த கட்ட தேர்வுக்கு (Short Listed), சம்பத்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு கோவைமாவட்ட கண்காணிப்பாளர் 
பத்ரி நாராயணன் IPS அவர்கள் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார் ...!


கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்க காவல் நிலைய பகுதியில்  சிறப்பு உதவி ஆய்வாளர் திரு ஜோதிமணி மற்றும் காவலர் 1906 திரு. கோட்டைச்சாமி ஆகிய இருவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அந்த நபர் காவலர்களை பார்த்தவுடன் சம்பவ இடத்தை விட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது விரட்டி பிடித்து சோதனை செய்ததில் ரூ.1270/- மற்றும் சி.சி.டி.வி. கேமரா, மற்றும் பூட்டுகளையும் திருடி வைத்திருந்ததும் மேலும் விசாரணை செய்ததில் பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. 
இதில் சிறப்பாக செயல்பட்ட 
மேற்படி  காவல்துறையினரே  மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்.
I.P.S. அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து




கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசி தப்பியோட முயற்சி செய்த நபரை  விரட்டிப் பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு...


கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா  என்பவர் ஆசிட் வீசி  தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் 999 திருமதி. இந்துமதி விரைவாக செயல்பட்டு மேற்படி சிவாவை விரட்டிப் பிடித்ததற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், I.P.S. அவர்கள் பெண் தலைமை காவலரின் வீர தீர செயலை வெகுவாக பாராட்டி ரூ.5000/-பண வெகுமதி வழங்கினார இதனைத் தொடர்ந்து


அன்னூர்  பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நான்கு சக்கர வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்க்கு பாராட்டு...


கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது  விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற நான்கு சக்கர வாகனத்தை  மூன்று மணி நேரத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  விபத்து ஏற்படுத்திய  வாகனத்தை கண்டுபிடித்து  கொடுத்த அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்  400 திரு.கருணாகரன் காவலர் 1613 திரு.கண்ணதாசன் மற்றும் 1860 திரு.குருசாமி ஆகியோரை பாராட்டும் விதமாக  காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் I.P.S.அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்ட காவலர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்..-

🌳 கே தமிழகம் சேட் ✍️