சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட வன பாதுகாவலர் பெரியசாமி.IFS அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது...

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட வன பாதுகாவலர் பெரியசாமி.IFS அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது.


வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 5143 ச.கி.மீ ஆகும். இதில், ஒசூர்
வனக்கோட்டமானது 1501 ச.கி.மீ (29 %) பரப்பளவுடன் மாவட்டம் முழுவதும் பரவி உள்ளது.
இவ்வனப்பரப்பானது காவேரி, சின்னாறு, தென்பெண்ணையாறு மற்றும் தொட்டஹல்லா
பட
ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக அமைந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிக அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வன உயிரினங்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு, அவைகளை பாதுகாக்கும் பொருட்டு, 2014.ஆம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமும், 2022ஆம் ஆண்டு காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயமும் அறிவிக்கை செய்யப்பட்டு,வருகிறது.

ஓசூர் வனக்கோட்டமானது இயற்கை வளங்கள் நிறைந்ததாகவும், 

அதிக அளவிலான வனஉயிரினங்களைக் கொண்டும் காணப்படுகிறது. இதனை பாதுகாத்து, இயற்கை சமநிலையை பேணிகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 2023ஆம் ஆண்டு 

உலக வன நாளை முன்னிட்டு,


சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட வன பாதுகாவலர் பெரியசாமி.IFS அறிவுறுத்தலின் பேரில்

ஒசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் செல்வி.  கார்த்திகேயனி, IFS உத்தரவின் பேரில் 
 
மாவட்ட உதவி வன பாதுகாவலர்
. எம். இராஜ மாரியப்பன். மேற்பார்வையில்

 வனங்களையும், வனஉயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர் வனசரக அலுவலர் ரவி. தேன்கனிக்கோட்டை, வனசரக அலுவலர் முருகேசன். ஜவளகிரி, வனசரக அலுவலர் சுகுமார். அஞ்செட்டி, வன சரக்கு அலுவலர் சீதாராமன். உரிகம், வனசரக அலுவலர் வெங்கடாசலம். இராயக்கோட்டை வனசரக அலுவலர் பாரத சாரதி.  கிருஷ்ணகிரி வனசார் அலுவலர் ரவி மற்றும் அந்தந்த வனசரக அலுவலர்கள் தலைமையில் 
உலக வன நாளை முன்னிட்டு 
 பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் அரசுப் பள்ளி மாணவ  மாணவியர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டும், 
பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தும், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பலகைகள், பேனர்கள் போன்றவற்றுடன் பள்ளி மாணவ மாணவியர்களுடன் ஊர்வளம் சென்றும், பொதுமக்களுக்கு மஞ்சல் பைகள் வழங்கியும் வனத்தின் முக்கியத்துவத்தினை வனத்துறையினர் தெரிவித்தனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️