ஓசூர் வனக்கோட்டத்தில் பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில் அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் வனத்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது

ஓசூர் வனக்கோட்டத்தில்   பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில்  அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள  அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் வனத்துறையின் ஏற்பாட்டில் நடைபெற்றது 

சேலம். தர்மபுரி. மாவட்ட  வன பாதுகாவலர் பெரியசாமி.IFS அறிவுறுத்தலின் பேரில்

கிருஷ்ணகிரி ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர். மற்றும் மாவட்ட வன அலுவலர் 

 செல்வி. க.  கார்த்திகேயனி, IFS , அவர்கள் உத்தரவின் படி  

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலம், அஞ்செட்டி வனச்சரகம், காவிரி கரையோரம் அமைந்துள்ள பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மையத்தில்,  அஞ்செட்டி, கேரட்டி மற்றும் பிலிகுண்டுலு கிராமங்களில் உள்ள, 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்றுவரும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 
அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரை, காலை சுமார் 10 மணியளவில் வனத்துறை வாகனங்களில் அழைத்து வரப்பட்டது.

ஒசூர் வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வகையான வனஉயிரினங்களின் வகைகள், அவைகளினால் ஏற்படும் பயன்கள் மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஒசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் திரு. எம். இராஜமாரியப்பன் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், காவேரி தெற்கு வனஉயிரின சரணாலயத்தின் சிறப்பு, அங்கு வாழ்ந்துவரும் வனஉயிரினங்கள் மற்றும் அவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அஞ்செட்டி வனச்சரக அலுவலர் திரு. பி. சீதாராமன் அவர்கள் விவரித்தார். பிலுகுண்டுலு அரசு தலைமை ஆசிரியர், பிலிகுண்டுலுவில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் ஆகியோர் வனங்களின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.


வனத்துறை அலுவலர்களால் அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டிகள், யோகா பயிற்சி, ஓரிகாமி மூலம் தாள்களில் பொம்மைகள் செய்தும் வனங்களை பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும், தென்னிந்தியாவில் வாழும் பறவைகளை இனங்கண்டறிதல் தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டும் விளக்கப்பட்டது.

மேலும், அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், கலர் பென்சில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட சுமார் 100 அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, பின்னர் வனத்துறை வாகனத்தில் பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச்சென்று விடப்பட்டது.

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் கட்டம் - II-ன் கீழ் நடத்தப்பட்ட மேற்படி விழிப்புணர்வு முகாம், 

ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர். மற்றும் மாவட்ட வன அலுவலர்.
 செல்வி. க. கார்த்திகேயனி, I.F.S., அவர்கள் உத்தரவின் பெயரில், 
அஞ்செட்டி வனச்சரக அலுவலர் மற்றும் அஞ்செட்டி சரக வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், அன்புக்கரங்கள் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பிலிகுண்டுலு சூழல் சுற்றுலா மைய உறுப்பினர்கள், உள்ளூர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

🌳 கே‌ தமிழகம் சேட்  ✍️