தமிழ்நாடு வனத்துறையில் அனைத்து நிலை வனபணியாளர்களுக்கும் அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க கேட்டும். தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை..!

தமிழ்நாடு வனத்துறையில் அனைத்து நிலை வனபணியாளர்களுக்கும் அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க கேட்டும். தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை...!

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி சுமங்கலி  மஹால் மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்தும் வன அலுவலர்கள் பெருந்திரலாக கலந்து கொண்டார்கள்.

முன்னதாக 
திருச்சி கிளை மாநில செயற்குழு உறுப்பினர். T.கிருஷ்ணன். வரவேற்புரையளித்தார். 
 திருச்சி மாவட்ட தலைவர்,
வி.பி. சுப்பிரமணியன். 
தஞ்சாவூர் மாவட்ட தலைவர், கே . ரஞ்சித்.

தஞ்சாவூர் மாவட்ட செயலாளர். கே சுரேஷ். ஆகியோர்கள். முன்னிலையில் 

தமிழ்நாடு வனசரக அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர்.
சு.கார்த்திகேயன் 
தலைமையில் சிறப்பாக கூட்டம். நடைபெற்றது. 

பல்வேறு மாவட்ட பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில்

வனத்துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக பல புதிய திட்டங்களை அமல்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர். மு க ஸ்டாலின். அவர்களுக்கும் நன்றி தெரிவித்தும். 

புதியதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின். வனத்துறை அமைச்சர் . மாண்புமிகு பொன்முடி.
மற்றும். வனத்துறை செயலாளர். செந்தில்குமார். வனத்துறை தலைவர். சீனிவாச ஆர ரெட்டி. ஆகியோர்களுக்கும்  நல்வாழ்த்துக்களை தெரிவித்தும் கூட்டம் துவங்கப்பட்டது.

வனசரக அலுவலர் சங்கம் மாநில கொள்கை வீரப்பு செயலாளர் 
S அழகுராஜ். தீர்மானங்களை குறித்து பேசினார். 

வனசரக அலுவலர் மாநில பொருளாளர்.C. கார்த்திகேயன் முந்திய வருட கணக்கு வாசித்தார். 

வனசரக அலுவலர் மாநில பொதுச் செயலாளர் E.செல்வராஜ் மாநிலத் துணைத் தலைவர் G. கார்த்திகேயன்.
மாநில இணை செயலாளர்.
O..V. பாண்டி. 
 ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 💠 கூட்டத்தில் வனப்பணியில் உயிர் தியாகம் செய்த வனதியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

💠வனக்காப்பாளர்களுக்கு ஊதிய வேறுபாட்டினை சரிசெய்திடவும்.

💠இடர்படி (STF சிறப்பு இலக்குப்படை)க்கு இணையாக ரூ6000/- வழங்கவேண்டும்.

💠 ஆண்டிற்கு இருமுறை சீருடைப்படி தலா ரூ4500ஆக உயர்த்தி காவல்துறைக்கு இணையாக வழங்கவேண்டும்.

💠 இணையதளம் மூலமாக செய்யப்படும் மாறுதல்களில் உள்ள குளறுபடிகளை முழுமையாக நீக்கவும். மாறுதலுக்கான கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டியும்.

💠. வனச்சரக அலுவலர் பணியிலிருந்து உதவி வனபாதுகாவலர் பதவிக்கு பதவி உயர்வு உடனடியாக வழங்கவும், உரிய காலத்தில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க கேட்டும். 
 மேலும் வனத்துறையின் மேம்பாட்டிற்கும் மற்றும் களப்பணியாளர்களின் நலன் தொடர்பாக பல்வேறு 60 கோரிக்கைகள் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில். 

மாநில மகளிர் அணி  D.தனலட்சுமி. 
மாநில அமைப்பு செயலாளர்கள்.
.D. மோகன வேல்.
திருமதி அருள்ஜோதி.
அருண்குமார். S.சிவசங்கரன். M.பிரபாகரன் B.கணேஷ் பாண்டியன். S ஆறுமுகம். தலைமை நிலைய செயலாளர் 
E முனுசாமி.  மற்றும் தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் மாவட்ட பிரதிநிதிகள். உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில்
திருச்சி
மாவட்ட கிளைச்செயலாளர் A.அன்பரசன் 
நன்றியுரை வழங்கினார்.

🌳 கே தமிழகம் சேட் ✍️