கோத்தகிரிகுஞ்சபணை அருகே யானை தாக்கி உயிரிழந்த சண்முகம் குடும்பத்தினருக்கு முதல் கட்டஉடனடி நிவாரணமாக ரூபாய்.50,000 NEFT மூலம் வனசரக அலுவலர் செல்வராஜ் வழங்கினார்.

கோத்தகிரிகுஞ்சபணை அருகே யானை தாக்கி உயிரிழந்த சண்முகம் குடும்பத்தினருக்கு முதல் கட்டஉடனடி நிவாரணமாக  ரூபாய்.50,000 NEFT மூலம் வனசரக அலுவலர் செல்வராஜ் வழங்கினார்.

நீலகிரி வனக்கோட்டம், கோத்தகிரி வன சரகத்தில்  கோத்தகிரி பிரிவு, குஞ்சபணை சுற்றுக்கு உட்பட்ட கொணவக்கரை சரிவு கப்புக்காடு, கீழ்கூப்பு என்ற பழங்குடி வன செட்டில்மென்ட்டில், காட்டு யானை தாக்கியதில், 
அந்த பகுதியை சேர்ந்த கோட்டை என்பவரது மகன் சண்முகம் (வயது சுமார் 41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது  தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில் 

ஊட்டி வன கோட்டை மாவட்ட மன அலுவலர் கௌதம் உத்தரவின்படி 

கோத்தகிரி வன சரக அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில்
 உடனடியாக கோத்தகிரி வன பணியாளர்களால் பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

மேலும் யானை தாக்கி இறந்தவரின் அம்மாவான திருமதி மாண்டே என்பவருக்கு உடனடி நிவாரணமாக ரூ.50,000 NEFT மூலம் வழங்கப்பட்டது.  அத்துடன் கீழ்கூப்பு வன செட்டில்மென்ட் பகுதியில், கோத்தகிரி வனப்பணியாளர்கள் யானை கண்காணிப்பு பணியை கவனித்து வருகின்றனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️