ஊட்டி 3 காட்டு மாடுகள் இறப்பு மர்ம நோயா வனத்துறையினர் விசாரணை....?

ஊட்டி 3 காட்டு மாடுகள் இறப்பு மர்ம நோயா வனத்துறையினர் விசாரணை....?

நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள வடக்கு வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தபோது  
சின்கோனா கிராமம் குடியிருப்புக்கு கீழ்பகுதியில். தொட்டபெட்டா பிட் புல்வெளியில் 
ஒரு ஆண் காட்டுமாடு மற்றும் இரு பெண் காட்டுமாடுகள் இறந்திருப்பதாக தெரிய வந்ததை தொடர்ந்து 

காட்டு மாடுகளின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. ஆனால் மூன்று மாடுகளும் இறப்பதற்கு சற்று முன்பு படுத்த நிலையில்  சாணத்தை   கண்டறியப்பட்டது. 

பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் மற்றும் 
வனபாதுகாவலர் 
டி. வெங்கடேஷ். 

நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம்.

உதவி வரப் பாதுகாவலர் (ஸ்குவாடு)  கிருபாகரன். 

ஊட்டி வடக்கு வன சரக அலுவலர் சசிகுமார்
 வனபணியாளர்கள் முன்னிலையில் 

மூன்று காட்டு மாடுகளுக்கும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர். ராஜேஷ்குமார். 
 மற்றும்  கால்நடை மருத்துவர் ரேவதி ஆகியோர்களால் 
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர்

பிரேத பரிசோதனையின் போது மூன்று காட்டு மாடுகளின் கீழ்கண்ட பாகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது. நுரையீரல்: வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் நிமோனிக் மாற்றங்கள்
இதயம்: எபிகார்டியம் முழுவதும் வெண்மையான கோடுகள் மற்றும் புள்ளிகள் வடிவில் சிதைவுற்ற மாற்றங்கள்.
மண்ணீரல்: திசுக்களில் அடர் சிவப்பு ரத்தக்கசிவு மாற்றங்கள்.
கல்லீரல்: அடர் சிவப்பு நிறம் மற்றும் கல்லீரல் திசுக்கள் நெரிசல் மற்றும் ரத்தக்கசிவு.
ரூமெனில் புல் உணவு பொருட்கள் நல்ல செரிமானத்துடன் காணப்பட்டது.

எனவே மூன்று மாடுகளும் புற்களை மட்டுமே சாப்பிட்டு இருக்கிறது. வேற எந்த உணவு பொருட்களை உட்கொள்ளவில்லை. பிரேத பரிசோதனையில் மூன்று காட்டு மாடுகளில் இருந்து அனைத்து சோதனைக்கும் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் அருகில் இரு சுனைகள் இருக்கிறது. அதிலிருந்து நீர் மாதிரிகளையும் சேகரம் செய்யப்பட்டு இருக்கிறது. 
இவை அனைத்தும் 
I.V.R.I  டாக்ஸிகாலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. 

இந்த மாடுகள் எவ்வாறு இறந்தது என்பதை ஆய்வகங்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தெரிய வரும். 

மேலும் தற்பொழுது வனசரக அலுவலர் சசிகுமார் மேற்பார்வையில் வனபணியாளர்களை 4 குழுக்களாக பிரித்து அந்த பகுதி முழுவதையும் தணிக்கை செய்யுமாறு பணிக்கப்பட்டு இருக்கிறது. என வனத்துறையினர் தகவல்...


🌳 கே தமிழகம் சேட் ✍️