திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம்' அழகி போட்டியில் மருத்துவம் படித்து வரும் திருநங்கை உள்ளிட்டவர்கள் அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம். உளுந்தூர்பேட்டை அருகே மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் குல தெய்வமாக வணங்கும். மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்ததுமான கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில்.
உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டு தோறும் 18 நாட்கள் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழாவில் பங்கெடுப்பதற்காக,
இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருவார்கள். திருநங்கைகள் கொண்டாடும் விழாக்களில்,
இத்திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த விழாவை ஒட்டி ஒன்றாகச் சங்கமிக்கும் திருநங்கைகள், தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொண்டு மகிழ்ந்திருப்பதோடு, புத்துணர்வைப் பெறுகின்றனர்.
மேலும், திருநங்கைகளின் பெருமையை மற்றவர்களை உணரச் செய்திடும் திருநாளாகவும் இந்தத் திருவிழா திகழ்கிறது.
சாகை வார்த்தலுடன் ஆரம்பமானது. கூத்தாண்டவரை மனதில் நிறுத்தி திருநங்கைகள் பலரும் கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்கொள்ளும் முக்கிய நிகழ்வு, திருவிழாவின் 16வது நாளான அன்று நடைபெற்றது.
இவ்வாறு திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வதற்குப் பின்னால், புராணக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்ததுமான கூத்தாண்டவர் கோவில் யில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு
மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும். கவுரவர்களுக்கும் போர் மூண்ட போது. பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில்
இருந்தனர். அப்படியாப்பட்ட சூழலில் பாண்டவர்கள் வெற்றி பெற 32 சாமுத்திரிகா லட்சணம் பொருத்திய ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள். கிருஷ்ணன். அர்ஜுனன். அரவாண் ஆகிய 3 பேர்மட்டுமே இருந்தனர்.
இந்தநிலையில் கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அரவாணிடம் இதய குறித்து கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டார்
ஆனால் அரவானண் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் அதனால் தாம்பத்திய உறவும் தேவை எனக் கூறினார் விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று எண்ணியிருந்த சூழலில் தான் கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உரு மாறினார். உடனே அரவானுக்கு திருமணம் நடந்தது அதன் பின்பு இரவு முழுவதும் கணவன் மனைவியாக வாழ்ந்த அரவாண் அதிகாலை களப்பலி கொடுக்கப்பட்டார்.
அதன் பிறகு தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் அதனால் கிருஷ்ணனின் மறு அவதாரமாக தங்களின் பாவித்து கொண்டு அரவாணை தங்களது கணவராக ஏற்று திருநங்கைகளால் தாலியை கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்
இத்தகைய சிறப்புமிக்க இந்த திருவிழா கடந்த 9.ஆம் தேதி மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினமும் பகலில் விஷ்னர் பிறப்பு. தர்மர் பிறப்பு. மகாபாரதம் சொற்பொழிவு. உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி களும் இரவில் சாமி திருவிதி உலாவும் நடைபெற்றது
விழாவில் பங்கேற்பதற்காக பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்துக்கு வந்தனர்.
இவர்களை மகிழ்விக்கும் வகையிலும். உற்சாகப்படுத்தும் விதமாகவும். திருநங்கைகளுக்காக பல்வேறு நடனப் போட்டிகள். கிராமிய பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள்.அழகிப் போட்டிகள் விழுப்புரம் நகரில் நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
இதையொட்டி பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பாட்டு புடவை அணிந்தும். தலை நிறைய பூக்களை வைத்துக் கொண்டும் கைநிறைய வளையல்கள். காது மூக்கு கழுத்தில் நகைகளை அணிந்து தங்களை புது பெண்கள்போல். அலங்கரித்துக் கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்
பின்னர் அங்குள்ள கடைகளில் மாங்கல்யத்தை வாங்கிய திருநங்கைகள் கோவிலுக்கு சென்று அரவாணை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து தங்கள் கணவனாக பாவித்துக் கொண்டு. கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர்
புது மணப் பெண்கள் போல் காட்சியளித்த திருநங்கைகள் கூத்தாண்டவர் கோவிலில் அருகில் இரவு முழுவதும் விடிய விடிய நடனமாடியும் கும்மியடித்தும் கூத்தாண்டவரை தனது கணவராக நினைத்தும் அவரின் அருமை பெருமைகளை குறித்து ஆடி பாடி உற்சாகமடைந்தன .
பின்னர் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பின்னர் விடையாத்தியும் . தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெற்றது
முன்னதாக 2024 கூவாகம் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில், சென்னையை சேர்ந்த ஷாம்ஸு முதலிடத்தையும்,
புதுச்சேரியில் மருத்துவம் படித்துவரும் வர்ஷா இரண்டாவது இடத்தையும்.
மூன்றாம் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா ஆகியோர் வென்றுள்ளனர்.
முதல் பரிசு வென்ற ஷாம்ஸு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என்னை அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்திய என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட்க்கு நன்றி. நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் அது உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவரும்.
திருநங்கைகளுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விட்டுவிடுவார்கள்.
என் அம்மா காலத்தில் பாலியல் தொழில் அதிக அளவில் நடைபெற்றது.
என்னுடைய காலத்தில் பாதியாக குறைந்துள்ளது.
என்னுடைய மகள் காலத்தின் அது முற்றிலுமாக குறைவதற்கு அரசு. தான் உதவி புரிய வேண்டும் எனக் கூறினார்.
மேலும் சில திருநங்கைகள் கூறுகையில் திருவிழாவுக்கு வரும் திருநங்கைகளுக்கு. போதிய இடவசதியும். கழிப்பிடங்களும் கூடுதலாக அமைத்து தர வேண்டும்..
நாங்கள் திருவிழாவுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️
உடன்
விழுப்புரம் சேனாதிபதி நிருபர் சுந்தர் பெருமாள்