ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் புகழ்வாய்ந்த அருள்மிகுபண்ணாரி மாரியம்மன் திருக் கோவில் உள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்
இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 12ஆம் தேதி பூச்சாற்றுடன் துவங்கியது
சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சுற்றுப்புற பகுதியில் உள்ள
புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி
பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் பண்ணாரி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து மக்களுக்கு காட்சியளித்தார் கடந்த 19ஆம் தேதி கம்பம் விழா துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தது
திருவிழாவின் முக்கிய நாளான குண்டம் திருவிழா
திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு பூ வளர்க்கப்பட்டது அதிகாலை 3.50மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து தாரதப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க அம்மன் அழைத்து வரப்பட்டு குண்டத்தை வந்து அடைந்தது .
பூசாரி பார்த்திபன் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தார் பிறகு கற்பூர தட்டுடன் முதலில் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார் அவரைத் தொடர்ந்து மற்ற பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் குண்டத்தில் இறங்கினர் திருவிழாவில் தமிழக அரசு செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் ,. அவர்கள்
எஸ்டிஎப் ஐ ஜி முருகன் அவர்கள்
அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் குண்டத்தில் இறங்கினர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்
குண்டம் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜவகர் உத்தரவின் பேரில்
ஏடிஎஸ்பி பாலமுருகன் மேற்பார்வையில் 500-க்கும்
மேற்பட்ட போலீசார். பெண் போலீசார் ஊர்க்காவல் படையினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு படை வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
🌳 கே.தமிழகம்சேட் ✍️