தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஸ்ரீபதி சிவில் நீதிபதி என்ற பெருமை பெற்றுள்ளார் குவியும் பாராட்டு

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண்  ஸ்ரீபதி சிவில் நீதிபதி என்ற பெருமை பெற்றுள்ளார் குவியும் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி ஸ்ரீபதி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்றார்.

அதற்காக தீவிரமாக படித்து வந்தார் இதனிடையே அவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் தேர்வுக்கு இரண்டு நாள் இருக்கும்போது, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் தேர்வு எழுதுவது சிரமம் எனமருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர்
தேர்வு எழுதியுள்ளார் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஸ்ரீபதி வெற்றி பெற்று, பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

இதற்காக 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீமதி செல்ல உள்ளார். அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் மேலும்.அவருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

🌳 கே தமிழகம் சேட்  ✍️