கோவையில் ரயில் தண்டவாளத்தில் யானைகள் இறப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் செயல்பாடு கட்டுப்பாட்டு மையம் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளை இந்தியாவிலேயே முதல்முறையாக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கினார்
கோவை மதுக்கரையில் இருந்து கேரளாவிற்கு ரெயில் கள் செல்ல
ஏ மற்றும் பி ஆகிய 2 வழித்தடங்களில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப் பட்டு உள்ளன.
இதில் தண்டவாளம் ஏ 1.8 கி.மீ. தூரமும்,
தண்டவாளம் பி 2.8கி.மீ.தூர மும் அடர்ந்த வனப் பகுதி வழியாக செல்கிறது.
இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்து விடுகிறது.
எனவே தண்டவாள பகுதி யில் யானைகள் நடமாட் டத்தை முன்கூட்டியே கண்ட றிந்து விபத்து நடப்பதை தடுக்க ரூ.7% கோடியில் திட் டம் தயாரிக்கப்பட்டது.
அதில் கோவையை அடுத்த மதுக்கரையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தண்டவாளம்
ஏ மற்றும் பி பகுதியில் - செயற்கை நுண்ணறிவு ம், கொண்ட 12 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன அவை பலத்து மழை மேகமூட்டம் வெயில் என அனைத்து காலநிலைகளும் இயங்கும் தன்மை கொண்டது. மேலும் தெர்மல் கேமராக்களும் உள்ளன இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை எட்டிமடை வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது
இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்களை தொடங்கி வைத்து வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்
நிவாரண உதவி தொகை வழங்கினார்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளரிடம் கூறுவதாக
வாளையார் ஆனைகட்டி சோளக்கரை இருட்டு பள்ளம் ஆகியவை யானைகள் விரும்பும் ஓய்வு இடங்களாக உள்ளது இதில் மதுக்கரை வனசரகம் சோளக்கரை பகுதியில் இரண்டு ரயில் தண்டவாள பாதைகள் உள்ளன ஆற்றில் தண்ணீர் குடிக்க காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்லுகிறன இது போன்றநேரங்களில் ரயிலில் அடிபட்டு யானை இறக்கிறன
எனவே தண்டவாள பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்டறிய ரூ 7 கோடியே 24 லட்சம் செலவில் 12 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதி நவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன
இந்த கேமராக்கள் தண்டயவாளம் அருகே யானைகள் வந்தால் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்புவதுடன் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி அனுப்பும் சம்பந்தப்பட்ட ரெயிலின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தியாவிலேயே கோவையில் தான் முதல்முறையாக இது போன்று செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது இது தவிர போன் மூலம் 24 மணி நேரம் காட்டு யானைகளை நடமாட்டம் கண்டறியப்பட்டு வருகிறது என கூறினார்
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திருமதி சுப்ரியா சாகு
முதன்மை தலைமைப் வனத்துறை பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுப்ரத்மெஹாபத்ரா
தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாச ரெட்டி.
ஆனைமலை புலிகள் காப்பகம் இயக்குனர் ராமசுப்பிரமணியம். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் வனசரக அலுவலர்கள் . வனவர்கள் வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️