தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, I.A.S., அவர்கள் தலைமையில் வனத்துறை சார்பில், வன உரிமைச் சட்டம் 2006 வழிகாட்டுதல்களை செயல்படுத்துதல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.
இன்று (05.10.2023) சென்னை, தலைமை செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு வனத்துறை சார்பில், "வன உரிமைச் சட்டம் 2006" செயல்படுத்துதல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும்
வன உரிமைச் சட்டம் 2006" வழிகாட்டுதல் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, I.A.S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, I.A.S., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, I.A.S. அவர்கள்
வன உரிமைச் சட்டம் 2006" செயல்படுத்துதல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து
வன உரிமைச் சட்டம் 2006" தொடர்பான வழிகாட்டுதல் புத்தகத்தினையும் வெளியிட்டார்கள். பின்னர், அவர் தனது தலைமையுரையில் தமிழகத்தில் இதுவரை 12728 தனிநபர் அனுபவ உரிமைச்சான்றுகள் மற்றும் 671 சமுதாய அனுபவ உரிமைச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். இச்சட்டத்தினை நிறைவேற்றும் துறை அலுவலர்கள் வன வாழ் மக்களை கருணையுடன் அணுக வேண்டும் எனவும், வனவளம் பாதிக்கப்படாமல் இச்சட்டத்தினை அமல்படுத்திட வேன்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹூ, I.A.S., அவர்கள் தனது முன்னிலையுரையில், மலைவாழ் பழங்குடியினர் வனத்துடன் இணைந்து வாழ்வதால் அவர்களது உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்திட வேண்டும் எனவும், அவர்களது உரிமை சார்ந்த விண்ணப்பங்களின்மீது தனிக்கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகளை வன அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள். வனத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அலுவலர்கள் இணைந்து வனவாழ் மக்களுக்கு இச்சட்டத்தின் நன்மைகள் கிடைத்திட முனைப்புடன் செயலாற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திருமதி. G.இலட்சுமி பிரியா, I.A.S., அவர்கள் தனது உரையில் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் வன உரிமைச்சட்டம் 2006 அமுல்படுத்துவதில் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் திரு. சுப்ரத் மஹோபத்ரா, I.F.S.,
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம். ( கோவை ) திரு.சேவாசிங், I..F.,S பழங்குடியின நலத்துறை இயக்குநர் எஸ், அண்ணாதுரை, இ.ஆ.ப. கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள், தலைமை வனப்பாதுகாவலர்கள், வனப்பாதுகாவலர்கள், மாவட்ட வன அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்களும் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்,
🌳 கே தமிழகம் சேட் ✍️