திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் வனத்துறையின் சார்பில் தேசிய வன உயிரின வார விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,I.A.S., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
வன உயிரின வார விழா கொண்டாடுவதனுடைய அடிப்படை நோக்கம் வனங்களையும் வன் உயிரினங்களையும் பாதுகாப்பது தான். மனிதர்கள் அனைவரும் இந்த பூமி மனிதர்களுக்கானது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பூமிக்கு கடைசியாக வந்தவர்கள் மனிதர்கள். கடைசியாக வந்த நாம் ஒட்டுமொத்த பூமியை மட்டும் சொந்தம் கொண்டாடாமல், பூமியைத் தாண்டி வேறு ஏதேனும் கிரகங்கள் கிடைக்குமா என்று ஆய்வு செய்து அதையும் நாம் சொந்தம் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். பூமி மிகப்பெரிய பரந்த நெருப்பு குலமாக இருந்து அதன் பிறகு குளிர்ந்து, மிகவும் குளிர்ச்சியான பூமியாக மாறி பிறகு ஒவ்வொரு செல்லு உயிரைகளாக இந்த பூமிக்கு வந்து பல செல் உயிரினங்கள் மாற்றம் அடைந்து எல்லா பரிணாம வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் பெற்று இன்றைய நிலையில் நம் மனிதர்களாக இங்கே இருக்கிறோம். இந்த பூமியை நாம் பாதுகாக்கவில்லை என்றால் வெப்ப நிலை அதிகரித்து அனைத்து உயிரினங்களும் அழிய நேரிடும்.
வெப்பநிலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அதிகமான மரங்களை வெட்டி சாய்ப்பதனால் தான். வெப்பநிலை உயர்ந்தால் பனி மலைகள் உருகும், நில பகுதிகள் கடலுக்குள் மூழ்கும், பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும், பூமியினுடைய சமநிலை மாற நேரிடும், அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சூழ்நிலை இருக்காது. கடந்த 20, 30 ஆண்டுகளில் பூமியினுடைய வெப்பநிலை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறது. ஆர்டிக் அண்டார்டிக் பகுதியில் பனிப்பாறைகள் அதிகமாக உருகி கொண்டிருக்கின்றது. கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து மரங்களையும் வெட்டி விட்டு கட்டடங்களை கட்டிக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அனைத்து மரங்களையும் வெட்டி விட்டால் பூமியின் சமநிலை மாறிவிடும். இந்த பூமியில் பூச்சி இனங்கள், பறவை இனங்கள், விலங்குகள் அனைவரும் தேவை. அப்படி இருந்தால் தான் சமநிலையை அடைய முடியும்.
காட்டை ஒரு தனி மனிதனாக, மனிதர்களால் உருவாக்க முடியாது காடு என்பது பல்லுயிர் பெருக்கம், மரங்களை நட்டுவிட்டால் மட்டும் அது காடாகி விடாது. அங்கே அனைத்து விதமான உயிரினங்களும் வாழவேண்டும். தேனகீக்களை அளித்தீர்களே ஆனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் உலக அளவில் பஞ்சம் ஏற்பட்டு விடும், தேனீ மகரந்த சேர்க்கைக்கு ஒரு மலரில் இருந்து இன்னொரு மலருக்கு கொண்டு செல்கின்ற பொழுது இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. தேனீக்களை அழித்துவிட்டால் விவசாயம் பாதிக்கப்படும். காடுகளில் புல் தரைகள் (மெடோஸ்) மிக மிக முக்கியமானது, ஏனெனில் புல்களின் வேறுகள் ஆழமாக கீழே சென்று, மழை பெய்கின்ற பொழுது மழை நீரை தேக்கி வைத்து பூமிக்குள் அனுப்புகின்ற காரணத்தினால் தான், நமக்கு ஆண்டுதோறும் நீர் ஆறுகளில் கிடைக்கின்றது. ஆறு செல்கின்ற பாதைகளில் எல்லாம் ஊற்றெடுக்கச் செய்யும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும், பல்லுயிர் பெருக்கத்தை வளரச் செய்யும், இறுதியாக கடலில் கலக்கின்ற பொழுது உப்பு நீர் ஆனது நிலத்தடி நீர்மட்டத்தில் உள்ளே புகுகின்ற காரணத்தினால் அந்த நிலம் பாடுபட்ட போகும், நீரானது கடலில் கலக்கின்ற பொழுது கடலோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புத்தன்மை குறையும்.
பூமியினுடைய சமநிலையை நாம் பாதுகாக்க தவறுகிறோம் உதாரணமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிகின்ற நெகிழி பொருட்கள் அதிகமாக பயன்படுத்துகின்றோம், அந்தப் பொருட்களை எரிப்பதன் மூலமாக டை ஆக்சின் என்ற வாய்வு வெளியேறி அதை நாம் சுவாசிக்கின்ற பொழுது நமக்கு புற்றுநோயை உருவாக்குகின்றது. நமது வாகனத்தின் மூலமாக வெளியேறுகின்ற கார்பன் மோனாக்சைடு பூமியினுடைய ஓசோன் மண்டலத்தில் ஓட்டைடைய செய்கின்றது, யூ.வி கதிர்கள் நேரடியாக பூமிக்குள் வருகின்றது, புற்றுநோயை உருவாக்குகின்றது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நாம் மரங்களை வளர்க்க தவறி விட்டோம்.
ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகின்ற பொழுது ஒரு மர கன்று நடுங்கள், வீட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் செடிகளை பரிசளிங்கள், நிச்சயமாக இந்த பூமியில் பசுமை அடைய முடியும். மனிதர்களாகிய நாம் எந்த அளவிற்கு இந்த பூமியில் வாழ்வதற்கு உரிமை இருக்கின்றதோ அதே அளவில் அனைத்து விலங்குகளுக்கும் உரிமை உள்ளது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே அனைவரும் வனங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதின் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் மட்டும் இல்லாமல் சுற்றி இருக்கின்ற அனைவருக்கும் வளங்களையும் வன உயிரினங்களையும் பாதுகாப்பதின் அவசியத்தை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,I.A.S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வில் வனச்சரக அலுவலர்கள் திரு.இளங்கோ, திரு.பாபு, திரு.குமார்,
சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️