சென்னை நீலகிரி வரையாடு திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்



தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக முதல்வர்          மு க ஸ்டாலின் அவர்கள்  அரசு ஆணை பிறப்பித்தார்  

மேலும் நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த திட்ட அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு முழு நேர முதல் திட்ட இயக்குனரையும் அரசு நியமித்து ஆணை வெளியிட்டு, பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு மூத்த விஞ்ஞானியையும் நியமனம் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்                                         
மு.க. ஸ்டாலின் அவர்கள்
தொடங்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் எம்.மதிவேந்தன், 

தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, IAS..

 சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாகு, I.A.S., 

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் . ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, I.F.S., 

கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் .
முனைவர் 
. வீ. நாகநாதன், I.F.S., 

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (கோவை)
கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் 
S..ராமசுப்ரமணியன், I.F.S., 

 கோவை மாவட்ட வன அலுவலர் 
.என்.ஜெயராஜ், I.F.S

 நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த திரு.பிரவீன் சண்முகானந்தம் மற்றும் திரு.தனுபரன் ஆகியோர்  உள்ளனர்

🌳 கே தமிழகம் சேட் ✍️