தமிழ்நாட்டில் முதல்முறையாக வனத்துறை விவசாயிகள் பங்களிப்புடன் 16 லட்சம் மதிப்பீட்டில் 4 கிலோமீட்டர் சூரிய மின் வேலியை. துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா துவக்கி வைத்தார்..! ராமேஸ்வரம் அருகே கடல் பசு. இறந்தது எப்படி வனத்துறை விசாரணை கடல் உயிரினங்கள் பாதுகாப்பதை குறித்து மீனவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன....!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக வனத்துறை விவசாயிகள் பங்களிப்புடன் 16 லட்சம் மதிப்பீட்டில் 4 கிலோமீட்டர் சூரிய மின் வேலியை.
 துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா துவக்கி வைத்தார்..!

ராமேஸ்வரம் அருகே கடல் பசு. இறந்தது எப்படி வனத்துறை விசாரணை கடல் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது....!!


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனக்கோட்டத்தில் ஆசனூர். கேர் மாளம். ஜீரஹள்ளி. தாளவாடி. நான்கு வன சரகங்கள்  உள்ளன இந்த வன சரகங்களில் யானை புலி சிறுத்தை காட்டுமாடு மான் மற்றும்  வன உயிரினங்கள் வசித்து வருகின்றன 

இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை. வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
மேலும்
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால்   கர்நாடக வனப்பகுதியில்  இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறின
 வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வருகிறது.  

இதனைத் தொடர்ந்து 

தாளவாடி வன சரகத்தில் தமிழ்நாட்டில் முதல்முறையாக  வனத்துறை மற்றும் விவசாயிகள் பங்களிப்புடன் சுமார் 16 லட்சம் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் சூரிய மின் வேலையை. சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் ராஜ்குமார் அறிவுறுத்தலின் பேரில் ஆசனூர் வன கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா தூக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து மக்குத்திபுரம் முதல் வீரப்பன் தொட்டி வரைக்கும் 12 கிலோமீட்டர் வரை யானை புகா அகழிகள் பராமரிக்கப்பட்டதை தொடர்ந்து ஆய்வு செய்தார். வனத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையால் யானை கள் விவசாய நிலங்களுக்குள் புகுவது வெகுவாக குறையும் என அப்பகுதி விவசாயிகள் கூறி வனத்துறையினருக்கு  நன்றி தெரிவித்தனர்


இந்த நிகழ்ச்சியில் தாளவாடி வன சரக அலுவலர் சதீஷ் நிர்மல் வனவர் பெருமாள்.. வனக்காப்பாளர்கள். வனக்காவலர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் விவசாயிகள் முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்



ராமேஸ்வரம் அருகே கடல் பசு. இறந்தது எப்படி வனத்துறை விசாரணை....!!
ராமேசுவரம்,  ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள   காப்பகத்தில் உள்ள தூத்துக்குடி. ஏர்வாடி. ராமநாதபுரம். ராமேஸ்வரம். மண்டபம். உயிர்க்கோள 4 சரகம் உள்ளது  

இந்தப் பகுதியில் கடல் பசு, டால் பின், நட்சத்திர மீன்கள், சுறா பவளப்பாறைகள் உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி னங்கள் உள்ளன. 
இவைகளை பாதுகாப்பதற்கும் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு 

 ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மதுரை வன பாதுகாவலர் பத்மாவதி அறிவுறுத்தலின் பேரில்

ராமநாதபுரம் மன்னர் வளைகுடா உயிர் கோள உயிரின காப்பாளர்  பகான் ஜகத்ஷ் சுதாகர் உத்தரவின் பேரில் 

அந்தந்த பகுதி சரக அலுவலர்கள் மற்றும் வனவர்கள் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் 

மேலும் கடல் பசுவின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு தொடர்ந்து . 

அவை முற்றிலும் அழிந்துவிடாமல் தடுக்கவும் டால்பின் மற்றும் கடல் உயிரினங்கள் பாதுகாப்பது குறித்து
மீனவர்களுக்கு இதுசம்பந்தமாக விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் கடற்கரையில் 
 அடிபட்டு இறந்த கடல் பசு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த  மீனவர்கள், வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். மண்டபம் வனசரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர். சுமார் 5 அடி நீளம் 300 கிலோ எடை கொண்ட அந்த கடல் பசுவின் உடலை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து புதைத்தனர்.

இறந்த கடல் பசு ஆழ்கடல் பகுதியில் பெரிய மீன்பிடி படகு அல்லது கப்பலில் அடிபட்டு கடல் பசு இறந்து இருக்கலாம் என்று  கூறப்படுகிறது...!

🌳 கே தமிழகம் சேட் ✍️