கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு பெட்டிஷன் மேளாவில் மனுக்கள் மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் I.P.S அதிரடிநடவடிக்கை பொதுமக்கள் மகிழ்ச்சி...!!

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு பெட்டிஷன் மேளாவில் மனுக்கள் மீது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர் I.P.S 
 அதிரடிநடவடிக்கை பொதுமக்கள் மகிழ்ச்சி...!!




தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என

மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க

 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்   சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி 

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு சுதாகர் IPS 

கோவை சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் முத்துசாமி IPS  ஆகியோர்கள்
முன்னிலையில் 



கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்றது 

மேலும் கோவை காவல்துறை சரகம் கோவை. ஈரோடு. திருப்பூர். நீலகிரி பகுதியில் உள்ள.  அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்களை கண்டறிந்து அவற்றிற்கான மறு விசாரணை (Re-enquiry)  

மாவட்ட காவல்
மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறு விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு அம்மனுக்களுக்கான சுமூகமான தீர்வு காணப்பட்டது.

இன்று ஒரே நாளில் நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சனை தொடர்பாக மொத்தம் 170 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொண்டதில் 150 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது, 19 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. 20 மனுக்கள் மீது மனு ரசீதுகள் (CSR) வழங்கப்பட்டது. 39 மனுக்கள் உயரதிகாரிகளின் மேல் நடவடிக்கைக்காக DCB, ALGSC..etc போன்ற பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டது. 72 மனுக்கள் சுமூகமான முறையில் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது.



பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை: சரகம் முழுவதும் நடைபெற்ற இந்த பெட்டிசன் மேளா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

🌳 கே தமிழகம் சேட் ✍️