ஊட்டி வனக்கோட்டம் உதகை தெற்கு வனசரகத்தில் இரண்டு புலிகள் இறந்தது
நாளை பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் வனத்துறையினர் தகவல்..!!
நீலகிரி வன கோட்டம்
உதகை தெற்கு வன சரகம்
அவிலாஞ்சி
எமரால்டு பீட்,
அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக எம்ரால்டு பீட் வனபணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து
முதுமலை புலிகள் காப்பக (கள) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் D.வெங்கடேஷ்.I.F.S. அறிவுறுத்தலின் பேரில்
நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம் I.F.S. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அவரது தகவலின்படி, இரண்டும் பெண் புலிகள். ஒன்று இறந்து கிடக்கிறது.மற்றொன்று நீர்த்தேக்கம் மேல் கரையில் இருந்தது
இரண்டு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம்.
ஊட்டி வனக்கோட்டம் தலைமை இடத்து மாவட்ட வன அலுவலர்
. தேவராஜ் IFS, (ACF) (HQ) தலைமையில்
ஊட்டி வடக்கு வனசரக அலுவலர் மற்றும் ஊட்டி தெற்கு வனசரக அலுவலர் பொறுப்பு அலுவலர் சசிகுமார் மேற்பார்வையில் வனவர்கள். வனக்காப்பாளர்.
வனகாவலர்கள். என 20 மேற்பட்ட வனபணியாளர்கள் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது. குழு சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளை தணிக்கை செய்து வருகிறது.
இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ
என களத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டிதலின் படி நாளை (10.9.23) காலை பிரேத பரிசோதனை செய்யப்படும். மூன்று வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இரண்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.மாதிரிகள் எடுக்கப்பட்டு நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️