முதுமலையில் சுற்றுலா பயணிகளுக்கு பாறு கழுகுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாறு கழுகுகள் குறித்த
8 மொழிகளில் ஆடியோ பதிவு துணை இயக்குனர் C. வித்யா I.F.S. திறந்து வைத்தார்
பாறு எனச் சங்கத் தமிழிலும் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வாழ் இருளர் பழங்குடியினராலும் -பத்' எனத் தோடர் மக்களாலும் - ரணபத்து' எனப்படுகு மக்களாலும் 'பிணந்தின்னிக் கழுகு' எனச் சமவெளி மக்களாலும் அழைக்கப்படும் இந்தப் பறவை இனம் இறந்த விலங்குகளை மட்டும் உண்டு காட்டையும், காட்டைச் சுற்றியுள்ள பகுதியையும் நோய்நொடி பரவாமல் தூய்மைப் படுத்தும் பணியினைச் செய்து வருகின்றன.
பாறுக் கழுகு இனம் தற்போது மிகவும் அரிதாகி விட்டன. அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்கப் பல்வேறு முயற்சிகளை மாநில அரசும், ஒன்றிய அரசும், வனத்துறையினர் உடன் இணைந்து ஆர்வமிக்கத் தன்னார்வலர்களும், நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து
உலக பார் கழுகுகள் தினத்தை முன்னிட்டு
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர்
டி. வெங்கடேஷ் IFS. அறிவுறுத்தலின் பேரில்
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்தியா
முதுமலை புலிகள் காப்பக மசினகுடி வன கோட்டதுணை இயக்குனர் அருண்குமார். ஆகியோர்களின் உத்தரவின் படி
முதுமலை தெப்பக்காடு வரவேற்பு அலுவலகத்துக்கு சபாரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுகள் பாறு கழுகுகள் பாதுகாப்புதின் அவசியத்தை பற்றி தெரிந்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாறு கழுகுகள் குறித்த அருளகம் தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பில் சுற்றுலா பயணிகள் தேர்ந்தெடுக்கும் மொழியில்
தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்பட 8 மொழிகளில் ஆடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா திறந்து வைத்தார். இதன் மூலம் பாறு கழுகுகள் குறித்த முழு விவரங்களை சுற்றுலா பயணிகள் தங்களது மொழிகளில் கேட்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில். மறு குடி அமர்வு. மற்றும் முதுமலை வரவேற்பு பொறுப்பு வனசரக அலுவலர்
சதாம் உசேன்.
தெப்பக்காடு வன சரக அலுவலர் மனோஜ் குமார்.
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் வன சரக அலுவலர் பிரசாத். ஆகியோர்கள்
மற்றும்
அருளகம் தன்னார்வலர்கள் அமைப்பின் நிறுவனர் பாரதிதாசன்.
வனவர்கள் வனக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக
பாறுக் கழுகுகள் வாழ்வாங்கு வாழவும், அவற்றினை அழியிலிருந்து மீட்டெடுக்கவும்
பாறுகழுகுகள் பாதுகாக்க சீகூர் வனசரக அலுவலர் தயானந்தன் தலைமையில்
மசினகுடி வனசரக அலுவலர் பாலாஜி
அருளகம் தன்னார்வலர்கள் அமைப்பின் நிறுவினர் பாரதிதாசன் ஆகியோர்கள்
முன்னிலையில்
மசினகுடிபஸ் நிலையத்தில்இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய சாலை வழியாக சென்று வனத்துறை சோதனைச்சாவடி அடைந்தது
இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பாறு கழுகுகளை பாதுகாப்போம். போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். முன்னதாக தன்னார்வு அமைப்பின் சார்பில் பறை இசை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தினர் இதனைத் தொடர்ந்து அனைவரும் பாறு கழுகுகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️