கோவை வனக்கோட்டத்தில் பல்வேறு நிலையில் உள்ள வனப் பணியாளருக்கு ஊதிய நிலுவைத் தொகை(அரியர்) மற்றும் ஊதியத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகளுக்கு வனப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.!!!
கோவை வனக்கோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வனக்காவலர்கள் பொறுப்பில் இருந்து வனக்காப்பாளராக பதவி உயர்வு பெற்று கோவை வனகோட்ட சரகங்களில் பொறுப்பேற்ற நிலையில் அவர்கள் நிலுவைத் தொகை (அரியர்) மற்றும் சம்பளம் தாமதம் ஆகுவதாகவும் இதனால் குடும்ப நடத்த பொருளாதார ரீதியில் சிரமமாக உள்ளதாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சென்னை வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக (கோவை ) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தல் பேரில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் படி கோவை கண்காணிப்பாளர் சுரேன் மேற்பார்வையில் பல்வேறு நிலையில் உள்ள விடுபட்டிருந்த வனபணியாளர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ளஊதிய நிலுவைத் தொகை (அரியர்) மற்றும் ஊதியத்தொகை. வழங்கப்பட்டுள்ளதாக தகவல். இதனால் வனப்பணியாளர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு . ஊதியத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த வனத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்து வருகிறார்
🌳 கே தமிழகம் சேட் ✍️