கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு வனசரக அலுவலர.அயூப்கான் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்..!!

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு வனசரக அலுவலர.அயூப்கான் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்..!!

 நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள 
வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.
அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து

திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் N.சதீஷ் 
 அறிவுறுத்தலின் பேரில் 

நாகப்பட்டினம் மாவட்டம் வன அலுவலர் மற்றும் வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உத்தரவின் பேரில்
 
கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மேற்பார்வையில்  
வனவர் வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் மற்றும்
கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் உள்ளிட்ட 12 குழுவினர் 

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2 .நாட்களாக  கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் அயூப் கான். சான்றிதழ் வழங்கினார்.


மேலும்
மதுராந்தகம், செய்யூர் பகுதியில் 22,000 பறவைகள

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நீர்ப் பறவைகள், நிலப்பறைவைகள் என்று 2 கட்டமாக நடைபெற்றது. இதில் வன அதிகாரிகள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் எடுத்த கணக்கெடுப்பில் நீர், நிலத்தில் வசிக்கும் பறவைகள் மொத்தம் 22,800 உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


அந்தியூர் அருகே தென்பட்ட அரிய பறவை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது, 50 ஆண்டுக்காலம் வாழக்கூடிய மலை இருவாச்சி பறவை தென்பட்டுள்ளது. அதேபோல், ஐரோப்பியாவிலிருந்து வலசை வந்த பருஞ்சுருட்டான் பறவையும் இருப்பது தெரியவந்தது. அந்தியூர் சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 86 பறவையினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️