💠 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சைலேந்திரபாபு அவர்கள் சிறப்பாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் புஷ்பராணிக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்...!💠 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரி நாராயணன் அவர்கள் ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை கௌரித்து பாராட்டு தெரிவித்தார்...!💠 நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு முனைவர் பிரபாகரன் அவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்

சென்னை சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலனை பேணுதல் போன்ற காரணங்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் புஷ்பராணிக்கு 
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்...!

சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் புஷ்பராணி சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலனை பேணுதல் போன்ற காரணங்களுக்காக
கடந்த 23 வருடங்களாக பணிக்கு சென்று வர சைக்கிளையே பயன்படுத்தி வருகிறார்.

சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்ப ராணியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்..!

கோவை மாவட்டம்
ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மைல்கல். காவலர்களை கௌரவித்த கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
திரு.பத்ரிநாராயணன் அவர்கள் ..!.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
பத்ரிநாராயணன் அவர்களால் கடந்த 2022 ஜூன் மாதம்  பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  சிறப்பு திட்டமான ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்  திட்டத்தின் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள மொத்தம் 60 Women Help Desk Officer  கள் மூலம் 

இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 1208 பள்ளிகளில், 3561 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 1,90,000 பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.



இதனை பாராட்டும் விதமாக  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
 பத்ரி நாராயணன் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் வைத்து ஒவ்வொருகாவல் நிலையங்களிலும் *Women Help Desk Officer* ஆக நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கியும், Badge -களும் வழங்கப்பட்டன. அதில் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய காவல் நிலையமாக 
பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் வடவள்ளி. காவல் நிலையங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு கேடயம் வழங்கியும், 

மேற்படி காவல் நிலையங்களில் சிறப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய பெண் காவலர்கள் கௌசல்யா, மீனா பிரியா, பிரேமா மற்றும் சரிதா ஆகியோர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்து உற்சாகப்படுத்தினார். 

மேலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூட திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் எதிரொலியாக வழக்குகள் பதிவு செய்வதற்கு உந்துகோளாக இருந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்ட காவலர்களிடமும் காவல் அதிகாரிகளிடமும் பெரிதும் வரவேற்பை பெற்றது உள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு கடுமையாக நடவடிக்கை எடுத்தும், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் நோக்கமே கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு குற்றங்களும் நடவாமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க *1098* என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல்
 கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தகவல்..!..


நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு
முனைவர் பிரபாகரன் அவர்கள் மாணவிகளுக்கு அறிவுரை 


நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி  மையத்தில் 

நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக மனித நேய வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 

நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் திரு முனைவர் பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகள் இடையே சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் உதகை நகர் துணை காவல் கண்காணிப்பாளர். யசோதா, 
உதகை ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி, 


நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா, தோடர் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் முகமது மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....!

🌳 கே தமிழகம் சேட் ✍️