முதுமலை தெப்பக்காட்டில் 50 வயதுடைய பெண் மாரி என்பவரே புலி தாக்கிக் இறந்தார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5.லட்சம் நிவாரண நிதியாக காசோலை துணை இயக்குனர் C.வித்தியா வழங்கினார்

முதுமலை  தெப்பக்காட்டில்  50 வயதுடைய பெண்  மாரி என்பவரே   புலி தாக்கிக் இறந்தார்  இதனைத் தொடர்ந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூபாய்  5.லட்சம் நிவாரண நிதியாக காசோலை துணை இயக்குனர் C.வித்தியா வழங்கினார்


முதுமலை தெப்பக்காடு யானை முகாமுக்கு அருகில் இருக்கும் பாடி கிராமத்தில் இருந்து மாரி (வயது 50)என்ற பெண் நேற்று மாலை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விறகு சேகரம் செய்ய சென்றிருந்தார். 
இரவு 9 மணி வரை திரும்பவில்லை என வனப் பணியாளர்களுக்கு அவருடைய வீட்டில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 

காலை 5 மணிக்கு  வனபணியாளர்கள் தேடிப் பார்த்ததில் யானை முகாமில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அந்த மாரி பெண்மணி இறந்து கிடப்பதை கண்டறியப்பட்டது. புலி தாக்கி அந்த பெண்மணி இறந்து இருக்கலாம். என தகவலை ஒட்டி அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது பின்னர். 

சடலத்தினை பிரேத பரிசோதனை செய்ய கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தெப்பக்காடுபகுதியில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டன  தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில் துணை இயக்குனர்கள் வித்தியா. அருண்குமார். மற்றும் காவல் துறையினர் ஆகியோர்கள் சாலை மறியல் ஈடுபட்ட வருபவர்களிடம் பேச்சுவார்த்தையில்  தீர்வு கண்டவுடன் பொதுமக்கள்  சாலை  மறியலை கைவிட்டனர்  


இதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் டி.வெங்கடேஷ் அறிவுறுத்தல் பேரில்  

முதுமலை புலிகள் காப்பக
 துணை இயக்குனர்  C.வித்தியா இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி 
ரூ 5 லட்சம் நிவாரண நிதியாக காசோலை வழங்கினார் தெப்பக்காடு வனசரக அலுவலர் மனோஜ் குமார் உடன் இருந்தார்
...!

🌳 கே தமிழகம் சேட் ✍️