நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி பிரபாகரன் அவர்கள் உத்தரவின் பேரில் பழங்குடியின மக்களின் குறைகளை பூர்த்தி செய்ய வேண்டி மாவட்ட நிர்வாகம் இணைந்து குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது

நீலகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர், அவர்கள் உத்தரவின் பேரில் 

நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள ஆதிவாசி பழங்குடியின மக்களின் குறைகளை பூர்த்தி செய்ய வேண்டி காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இன்று 

குறைதீர்ப்பு முகாம் மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெள்ளத்திகொம்பை 

மசினகுடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாயார், பூதநத்தம், உண்டி மாயார், 

கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோட்டுக்கல், கம்பையூர், பாவியூர், கோழிகுட்டை 
நியூகோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலவாடி, குறிஞ்சி நகர், காமராஜர் நகர் மற்றும் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படச்சேரி, முருக்கம்பாடி ஆகிய ஆதிவாசி கிராமங்களில் நடத்தப்பட்டது. 

இதில் அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்தும், மனுக்கள் பெறப்பட்டது. 

இக்குறைதீர்க்கும் முகாம்களில் மொத்தம் 430 ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டும், 146 மனுக்கள் பெறப்பட்டது சில மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டது.

கே தமிழகம் சேட்