இயற்கையுடன் இளைப்பாற்றுவோம் காட்டுக்குள் மாணவ மாணவிகள். திகில் பயணம். பறவைகள் உயிரினங்களைக் கண்டு. மகிழ்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு பாராட்டு நன்றி தெரிவித்தனர்

இயற்கையுடன் இளைப்பாற்றுவோம்  
காட்டுக்குள் மாணவ மாணவிகள். திகில் பயணம். பறவைகள் உயிரினங்களைக் கண்டு. மகிழ்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு  பாராட்டு நன்றி தெரிவித்தனர்...!

மேற்கு தொடர்ச்சி  மலையின் மடியில் அமைந்துள்ளது. 
தமிழ்நாட்டில் 
திருநெல்வேலி. மாவட்டத்தில் முதல் களக்காடு. முண்டந்துறை புலிகள் காப்பகமாக இருந்து வருகிறது . 

இந்த காப்பகத்தில்
பொதிகை மலை, மகா சித்தரான அகஸ்தியர் இங்கு வந்து தங்கியதாக. சொல்லப்படுகிறது  

பொதிகை மலையில் உருவாகி.
காரையாறு, சேர்வலாறு, கடனாநதி, சித்தார்.
சொரிமுத்து அய்யனார் கோவில்.. பாபநசம்
ஆறு மற்றும் அகத்தியர் அருவி.
ஆகியவை தாமிரபரணி ஆற்றின் இடது புறத்திலும், மணிமுத்தாறு மற்றும் பச்சையாறு வலப்புறத்திலும் துணை ஆறுகள் ஆகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலையில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடி . சிங்கவால் குரங்கு. விலங்குகள். அரிய வகை பறவைகள். மற்றும் பல்வேறு சிறிய, பெரிய வகை பூச்சி இனங்கள்.  உள்பட பல்வேறு அரியவகை உயிரினங்கள். தாவரங்கள். வாழ்கின்றன. 


இதனைத் தொடர்ந்து 

வனத்துறையில் பல்வேறு திட்ட பணிகளை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வரும் . சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர். வனமகள் திருமதி சுப்ரியா சாகு.IAS. அவர்களின். உத்தரவின் படி   

 திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை. புலிகள் காப்பக. கள.இயக்குனர் பொறுப்பு. N.சதீஷ்.IFS.
அறிவுறுத்தலின் பேரில்
களக்காடு. முண்டந்துறை. புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குனர். இளையராஜா.IFS. மேற்பார்வையில்.
 

முண்டந்துறை. வனசரகம் ஏற்பாட்டில் 
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கையோடு இளைப்பாருவோம்" என்ற தலைப்பில் இயற்கை முகாம்கள் நடத்தப்படுகிறது. 

இந்த முகாமில் 


இயற்கை.சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காகவும், இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கல்வியைக் கடந்து, இயற்கை வளம் காத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள், மலைகள், நிர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை அமைப்புகள் குறித்தும், இயற்கையோடு இணைந்து சிறந்த வெளிப்புறக் கல்வித்திட்டத்தினையும், மாணவர்கள் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இயற்கை முகாமில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவர்களது பள்ளிகளுக்கு சென்று முகாமில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும். முகாம் முடிந்த பின்பு நல்ல முறையில் அனுப்பி வைக்கவும் முண்டந்துறை வனச்சரக வாகனம் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு முடித்த பின்பு பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் பற்றிய வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படுகிறது. பின்னர், சேர்வலாறு மற்றும் காரையார் அணைப்பகுதிகளில் பார்வையிட்டு பின்னர், நான்கு கி.மீட்டர் வரையில் நடைபயணமாக சென்று காடுகளைப் பற்றியும், அதன் அவசியத்தினைப் பற்றியும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர், காட்டினைச் சுற்றிப்பார்த்து விட்டு வனவிலங்கு கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற செயல்பாடுகள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது.
மதிய இடைவேளை முடிந்து இயற்கை முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களின் அறிவுத்திறன், சிந்தனை, யூகிக்கும் தன்மைக்கு சவால் விடும் வகையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவத்தினை அடுக்குதல் போன்ற விளையாட்டுகளை நடத்தி உற்சாகப்படுத்தப்படுகின்றனர். முண்டந்துறை கூட்ட அரங்கில் வைத்து மாணவியர்களுக்கு வனத்தினைப் பற்றியும், வனத்தினைப் பாதுகாப்பது பற்றியும் விழிப்புணாவு மற்றும் பயிற்சிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

மாலை சான்றிதழ்கள் மற்றும் தேநீர் வழங்கப்பட்டு இயற்கை முகாம் நிறைவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் இயற்கை முகாமில் கலந்து கொள்ளுவதற்காக இயற்கை ஆர்வலர் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றனர்.
ஆயிரம் மாணவர்களுக்கு இயற்கை முகாம் கொடுக்கும் இலக்கில் 12.03.2025ம் அன்று துவங்கி இது நாள் வரை 

கீழ்காணும் பள்ளியிலிருந்து 
காணிகுடியிருப்பு
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி முதல்
ஆத்துக் குறிச்சி.
கஸ்தூரி ரங்கபுரம. சீலாத்திகுளம்
 சண்முகாபுரம்.
சமூக ரெங்கபுரம்.
 ராதாபுரம்.
கூடன் குளம்.
குட்டம்.
ரோஸ்மியாபுரம்.
 கோலியான்குளம்.
 பழவூர்.
செட்டிகுளம். ஆகிய பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி. வரை மாணவர். .மாணவிகள். ஆசிரியர்கள் சுமார் 500க்கும் 
மேற்பட்டவர்கள்  இயற்கை முகாமில் ஆர்வமுடன் கலந்து கலந்துகொண்டு வனத்துறையினருக்கு மகிழ்ச்சியுடன் நன்றியும்  பாராட்டு தெரிவித்து வருகிறனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️