மேட்டுப்பாளையம் யானை தந்தம் விற்பனை தொடர்பாக வனவேட்டை தடுப்பு காவலர் உள்பட 8 பேரை நீதிமன்ற 15 நாள் காவல்

மேட்டுப்பாளையம் யானை தந்தம் விற்பனை தொடர்பாக  வனவேட்டை தடுப்பு காவலர் உள்பட 8 பேரை நீதிமன்ற 15 நாள் காவல்..

மத்திய வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு, தெற்கு மண்டலம் மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் உயிரின குற்ற தடுப்பு பிரிவு கோவை மண்டல குழுவினர் 

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், யானை தந்தங்கள் விற்பனை நடைபெறவுள்ளதாக, கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 

ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் பேரில்

கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி


மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின். தலைமையில் 

வனவர் முனியாண்டி மேற்பார்வையில்

வனக்காப்பாளர்கள் ஹக்கீம். பிரதீப். வன காவலர் ராமகிருஷ்ணன் மற்றும்
வனப்பணியாளர்கள் அடங்கிய குழு. 

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் அடாத மழையும் பொறுப்பெடுத்தாமல் மறைந்திருந்து கண்காணித்தபோது, ஊட்டி சாலை-
அருகே, பிரதிஷ் மற்றும் சின்னபாண்டி என்பவர்கள், தந்தத்தை விற்பனை செய்வதற்காக, சுப்பிரமணி என்பவரிடம், கட்டை பையில் மறைத்து வைத்திருந்த முறிந்த நிலையில் இருந்த தந்தத்தை காண்பிக்கும்போது, வனப்பணியாளர்களால் கையும் களவுமாக மூவரும் பிடிபட்டனர்.

பின் மூவரி மும் விசாரணை செய்கையில், பிரதிஷ். குணசேகரன் மற்றும் சின்னபாண்டி ஆகியோர் ஊட்டி  சாலை வந்து சுப்பிரமணியிடம் தந்தத்தை விற்பதற்காக விலை பேசியுள்ளதும், பிரதிஷ் என்பவர். ராஜ்குமார் என்பவரிடமிருந்து தந்தத்தை வாங்கியுள்ளதும், ராஜ்குமாருக்கு நஞ்சுண்டன் என்பவர் தந்தத்தை கொடுத்துள்ளார். ராஜ்குமார், குணசேகரன், மனோஜ் மற்றும் நஞ்சுண்டன் ஆகியோரையும், அவர்களுடன் சேர்த்து தந்தத்தை விற்க பயன்படுத்திய சிவப்பு நிற ஆல்டோ காரையும், இருசக்கர வாகனம் மற்றும் மரக்கட்டையால் செய்யப்பட்ட போவி யானை தந்தத்தையும் கைபற்றப்பட்டது.

நஞ்சுண்டன் என்பவரை விசாரித்தபோது, வேலியே பயிரை மேய்ந்த கதை போல் .விளாமுண்டி வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலரான மணிகண்டன் என்பவர் யானை தந்தத்தை கொடுத்துள்ளது தெரிய வந்தது.

 மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ளும் போது, 2017ம் ஆண்டு தாம்புக்கரை காப்புக்காடு. தாம்புக்கரை பள்ளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது, வனப்பகுதியில் கிடந்த யானை தந்தத்தை எடுத்து மறைத்து வைத்துள்ளதும், நஞ்சுண்டன் யானை தந்தம் கேட்டதால், யானை தந்தத்தை எடுத்து கொடுத்துள்ளார். பின் நஞ்சுண்டன் தன்னிடமிருந்து யானை தந்தத்தை ராஜ்குமார் மூலம் பிரதிஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். எதிரிகளின் இச்செயலானது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972, பிரிவு 39(b)(d), 44, 49(b)ன்படி

குற்றமாகும். பிரிவு-51ன்படி தண்டனைக்குரியது. குற்றவாளிகள் விபரம்

A1) M.பிரதிஷ், கீழ்கோத்தகிரி, A2 ) Yகுணசேகரன், சோலூர் மட்டம். A3) K.ராஜ்குமார், சோலூர்

மட்டம், A4) S.நஞ்சுண்டன், கரிக்கையூர், அரக்கோடு, A5 S.மணிகண்டன், பவானிசாகர். A6) P.சின்னபாண்டி, சிறுமுகை A7) 1.சுப்பிரமணி, கன்னேரிமுக்கு, கோத்தகிரி, A8) Y.மனோஜ்,

சோலூர் மட்டம்,

மேற்கண்ட எதிரிகளை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க,  மேட்டுப்பாளையம் கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர்,  அவர்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

🌳 கே தமிழகம் சேட் ✍️