மருத்துவ தாவரங்களை பாதுகாக்க வேணடும். மேலும் அவற்றை மதிப்பு கூட்டி சந்தைப் படுத்த வேண்டும், என, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் I.அன்வர்தீன் IFS பேசினார்.
மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து, தமிழ் நாடு வனத்துறை பல்லுயிர் பாதுகாப்பு பசுமையாக் கல் திட்டத்தின் நிதியுடன், மருத்துவ தாவரங்கள், அரிய மற்றும் அழிந்து வரும் மரங்கள், மரம் சாரா வனப் பொருட்கள் பற்றி திறன் மேம்பாட்டு பயிற்சி. மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் இரண்டு நாட்கள் நடந்தது
பயிற்சி துவக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாலசுப்பிரமணியம் . தலைமையில் நடைபெற்றது
வனஉயிரியல் மற்றும் மர மேம்பாடு துறை தலைவர் ரேவதி..
சமூக அறிவியல் துறை தலைவர் வரதராஜ். ஆகியோர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்
இந்த நிகழ்ச்சியில்
12 மாவட்டங்களைச் சேர்ந்த 40 வனவர்கள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்.
பேசுகையில் காடுகளின் முக்கியத்துவம். மருத்துவ பயிர்கள் மற்றும் மரம் சாரா வனப் பொருட்களின் முக்கியத்துவம் பயன்பாடு குறித்து விளக்கினார்
தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் முதன்மை திட்ட இயக்குனர்
I.அன்வர்தீன்.IFS. பேசுகையில் சுற்றுச்சூழல் அமைப்பின் பன்முகத்தன்மை இனங்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் முக்கியமானவை. இதை பாதுகாக்க வேண்டும்.
மருத்துவ தாவரங்களை மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வேண்டும் அழிந்து போன மரங்களான செம்மரம். சந்தன. மரங்களை சாகுபடி செய்ய வேண்டும் என கூறினார்
வன கல்லூரியில் உள்ள மருத்துவ தாவர பூங்காவில் உள்ள செடிகள் மரங்களை பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு. காண்பித்து அதன் பயன்பாடுகளை விளக்கப் பட்டன
பங்கேற்ற அனைவருக்கும் I.அன்வர்தீன் சான்றிதழ் வழங்கினார்
மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை வேளாண்மை துறை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்
🌳 கே தமிழகம் சேட் ✍️