மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி அவர்கள் ஆய்வு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பாதல் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி அவர்கள் ஆய்வு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பாதல் பொது மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது..

பல நேரங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்கிறது..

தினமும் பிற்பகலில்  மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்யும் மழை  இரவு வரை விட்டு விட்டு பெய்தபடி உள்ளது..

இதனால் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது இதனால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி அவர்கள்

 மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் அருகே வசிக்கும் பொதுமக்கள்,தேக்கம்பட்டி,நெல்லித்துறை,ஓடந்துறை,லிங்காபுரம்,சிறுமுகை,ஆலங்கொம்பு,காந்தவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தும் மேலும் பொது மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவும் இறங்கவோ துணி துவைக்கவும் கூடாது என அறிவுறுத்தினர். 
இந்த ஆய்வின் போது கோவைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
 பத்ரி நாராயணன். 
,மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பாலாஜி,காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


🌳 கே தமிழகம் சேட் ✍️