.நீலகிரி வனக்கோட்டத்தில் 2 புலிகள் 4 புலி குட்டிகள் எப்படி இறந்ததுதேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பெங்களூர் அலுவலக, IG திரு முரளி IFS தலைமையில் குழு விசாரணை...!

.நீலகிரி வனக்கோட்டத்தில் 
2 புலிகள் 4 புலி குட்டிகள் எப்படி இறந்தது
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பெங்களூர் அலுவலக, IG திரு முரளி IFS  தலைமையில் 
குழு விசாரணை...!

 நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி டெரிட்டோரியில் வனக்கோட்டத்தில்

கடந்த 40 தினங்களில்
 நான்கு வயதான 2 புலிகள் மற்றும் 4 புலிக்குட்டிகள் இறந்தது தொடர்பாக இன்று தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் பெங்களூர் அலுவலக, IG.திரு முரளி IFS

இந்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு, சென்னை தலைமையிட துணை இயக்குனர், திரு கிருபா சங்கர், I F S,  

மற்றும் இந்திய வன உயிரின நிறுவனம், டேஹராடூன்,  டாக்டர் ரமேஷ் ஆகியோர்கள் 

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், மற்றும் வன பாதுகாவலர்
 திரு வெங்கடேஷ்,IFS.

நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர், நீலகிரி, திரு கௌதம்.IFS மற்றும் 

மசனகுடி வனகோட்டதுணை இயக்குனர், 
திரு அருண்குமார்,   

வனகால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் ஆகியோர்களுடன் 
முதலில் 4 புலி குட்டிகள் இறந்த சின்ன குன்னூர் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். ஆய்வின் போது முதன் முதலில் புலிக் குட்டிகள் உயிருடன் எங்கு பார்க்கப்பட்டது என்பதை கண்டறிந்தார்கள். 

பின்பு அந்தப் பகுதியை சுற்றி பார்த்தார்கள்.  அந்த நான்கு புலிகள் இறந்தது தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கைகளை அறிக்கைகளை கொண்டு ஆய்வு செய்தார்கள். 
பின்பு களப்பணியாளர்களுடன் புலிக் குட்டிகளை தணிக்கை செய்த விவரங்கள் & அவைகள் இறந்த விபரங்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர், டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களிடம் 4 புலிக்கட்டிகளின் பிரேத பரிசோதனை செய்தது தொடர்பாக விசாரித்தார்கள். 
பின்பு துணை இயக்குனர், அருண்குமார் அவர்களிடம் நடைபெற்று வரும் தாய் புலிகளின் தேடுதல்  பணிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவாதித்தாத்கள். 

பின்பு எமரால்டு பகுதிக்கு சென்று எமரால்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயில் செப்டம்பர் 9ஆம் தேதி இறந்த இரு ஆண் புலிகள் தொடர்பாக அந்த இடத்தை ஆய்வு செய்தார்கள். அங்கு எந்த இடத்தில் புலிகள் இறந்து கிடந்தது என்பதையும் மற்றும் மாடு  இறந்தது தொடர்பான இடத்தையும் கண்டறிந்தார்கள். மேலும் களப்பணியாளர்களிடம் கலந்துரையாடினர். மற்றும் மாவட்ட வன அலுவலர் கௌதமிடம் புலிகள் இறப்பு தொடர்பாகவும் கலந்துரையாடினர். தொடர்ந்து அந்த மாட்டில்  விஷம் வைத்தது தொடர்பாக யார் என்று கண்டறிந்த குழுவின் தலைவர் 
திரு தேவராஜ் I F S அவர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் இரு புலிகளையும் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் ராஜேஷ்குமார் அவர்களிடமும் கலந்துரையாடினர். பின்பு இரண்டு புலிகள் இறந்தது தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கைகள் என் டி சி ஏ வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்டதா என்பது தொடர்பாக அறிக்கைகளை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் தணிக்கை முடித்துக் கொண்டு திரும்பினார்கள். விரைவில் புலிகள் இறந்ததைக் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது 

🌳 கே தமிழகம் சேட் ✍️