மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் மாநில வன உயிரின வாரியத்தின் எட்டாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன்
அவர்கள் தலைமையில் மாநில வன உயிரின வாரியத்தின் எட்டாவது ஆலோசனை
கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன உயிரினம் சார்ந்த பல்வேறு திட்ட முன் மொழிவுக்கு வன உயிரின வாரியம் பரிந்துரை செய்தது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள வன உயிர்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து விவாதம்நடைபெற்றது.
மேலும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்கான முன் முயற்சிகளான வன உயிரின தடுப்பு பிரிவு, வன உயிர்களின் முதலுதவி சிகிச்சை மையம் மற்றும் காடுகளை காப்பதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு சிரத்தையுடன் எடுத்து வருகிறது என்று மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையுடன் சேர்ந்து கோயில் காடுகளைபாதுகாக்க தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடல் ஆமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த விவாதிக்கப்பட்டது.
தமிழக வனப்பரப்பில் உள்ள அந்நிய களைச் செடிகளை அகற்ற அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக மாண்புமிகு அமைச்சர் டாக்டர் மதிவேந்தன். அவர்கள் கூறினார்.
உயிரினங்களால் ஏற்படும் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருவது குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா I.A.S. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ I.A.S..
சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயசூரியன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) திரு.சுப்ரத் முஹபத்ர IFS.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் திரு.ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி IFS
மற்றும் வன உயிரின வாரியத்தின் உறுப்பினர்கள். அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️