காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உதகையில் தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் நடனமாடினார்*.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். பின்னா் மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடா்ந்து எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.
இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்த நிலையில், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, தற்போது அவா் வயநாடு எம்.பி.யாக தொடா்கிறாா்.
இவ்வழக்கு விவகாரத்துக்குப் பிறகு வயநாட்டுக்கு முதல்முறையாக ராகுல் காந்தி செல்கிறார். தில்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவர், உதகையில் முத்தநாடு கிராமத்தில் தோடர் இன மக்களைச் சந்தித்துப் பேசினார்.
"காரில் இருந்து இறங்கிய ராகுலுக்கு மகளிர் சால்வை அணிவித்து கவுரவித்தனர். முன்னதாக, ஊட்டி தலைகுந்தா அருகே, முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடி பெண்களுடன் ராகுல் நடனமாடினார். தொடர்ந்து அவர், தோடர் பழங்குடி குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.
பின்னர் அவர், தோடர் இளைஞர்கள் இளவட்டக்கல் தூக்குவதை ரசித்தார். கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு, ஜவஹர்லால் நேரு, மகள் இந்திராவுடன் கோத்தகிரிக்கு வந்த நிலையில், தற்போது ராகுல் வந்துள்ளதாக, மக்கள் நினைவு கூர்ந்தனர்.
"
அங்கு அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் தோடர் இன மக்கள் உடையணிந்து அவர்களுடன் ராகுல் காந்தி நடனமாடினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஊட்டி.நிகழ்வுகளை முடித்து கொண்டு கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு சென்றார்
🌳 கே தமிழகம் சேட் ✍️