ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023" அறிக்கையை வெளியிட்டு
வன உயிரின குற்றத் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை
மாண்புமிகு முதலமைச்சர்
மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
சென்னை சைதாப்பேட்டை பணங்கள் மாளிகையில் அமைக்கப்பட்ட உள்ள வன உயிரின குற்றத் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர்
மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 8 தேதி அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில்,
தமிழ்நாடு அரசின் வனத்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக யானைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறை ரீதியிலான நடவடிக்கைகளின் அடிப்படையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் முதல்வரின் குட்புக்கில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை 17.05.2023 முதல் 19.05.2023 வரை நடத்தியது. தமிழ்நாட்டின் 26 வனக்கோட்டங்களில் தொகுதி கணக்கிடுதல் முறை மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் நேரடியாக காணப்பட்ட யானைகளின் தரவுகளை அடிப்படையாக கொண்டு, யானைகளின் இனத்தொகை கட்டமைப்பினை ஆராய்வதை முக்கிய நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2017-ல் 2761 ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை, தற்போது 2961 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நான்கு பிற யானைகள் காப்பகங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி கிழக்கு தொடர்ச்சிமலை யானைகள் காப்பகமானது அதிக எண்ணிக்கையில், அதாவது 2477 யானைகளை கொண்டுள்ளது.
இக்கணக்கெடுப்பின் மூலம் ஆண் யானை மற்றும் பெண் யானை சதவிகிதம் 1: 2.17 ஆக உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1105 யானைகளும், மேற்கு தொடர்ச்சி மலைகளில் 1855 யானைகளும் உள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையை விட மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
இந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் (12.05.2023 முதல் 16.05.2023 வரையில்) பல்வேறு யானை சரகங்களில் 1731 துறைப்பணியாளர் மற்றும் 368 தன்னார்வலர்கள், என மொத்தம் 2099 பேர் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 3496 சதுர கி.மீ பரப்பளவிலான 690 பிளாக்குகளில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு 5 சதுர கி.மீ-க்கு கீழுள்ள பல சிறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, 17.05.2023 அன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18.05.2023 அன்று யானை பிண்டம் கணக்கெடுப்பு மூலமும் 19.05.2023 அன்று 26 வனக்கோட்டங்களில் நீர்க்குமிழிகள் முறை மூலமும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேற்கண்ட கணக்கெடுப்பு முறையானது, டேராடூனில் உள்ள இந்திய வன விலங்குகள் நிறுவனம், மயிலாடுதுறை ANC கல்லூரி மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து
2021 2023 ஆம் ஆண்டு வனத்துறை மானே கோரிக்கையின் போது வன உயிரின குற்றங்களை கண்டறிந்து தடுக்க வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் தடுக்க பிரத்யோக பிரிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
அதன்படி இந்த பிரிவு வன உயிரின குற்றங்கள் குறித்து தவக்களை சேகரித்தல் சட்ட விரோதமான வன உயிரினங்கள் மற்றும் வன உயிரின பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்தல். உலகளாவிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட தொடங்கியது
வன உயிரின குற்றங்கள் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல். வனங்களை ஒட்டி வாழும் பகுதிகளில் உள்ள மக்களிடையே தகவல் கட்டமைப்பு மேம்படுத்தல் வன உயிரின குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ள இடங்களை வரைபடமாக தயாரித்தல் ஆகிவற்றை அடிப்படையாகக் கொண்டும். இந்தப் பிரிவு செயல் பட்டு வருகிறது.
இந்த பிரிவின் தலைமையகம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டு வனம் மற்றும் வன உயிரின குற்ற கட்டுப்பாடு இயக்குனரை தலைவராகவும். சென்னை கோவை மதுரை ராமநாதபுரம் ஆகிய மண்டலங்களில் துணை இயக்குனர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறது இந்த பிரிவில் 118 முன் கள வனப் பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகிறனர்.
இந்தப் பிரிவின் மூலம் 190 க்கும் அதிகமான வன உயிரின குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் யானை தந்தங்கள் மற்றும் யானை தந்தத்தினால் பொருட்களை விற்பனை செய்தல். புலித்தோல் மற்றும் அதன் பாகங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தல். மற்றும் சட்டவிரோதமாக பாம்புகள். கிளிகள். கடல் சங்குகள். கடல் அட்டைகள் ஆகிவை வைத்திருந்த குற்றங்கள் என 50-ம்க்கு மேற்பட்ட வனக் குற்றங்களில் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வன உயிரின பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்தப் பிரிவுக்கென பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அரை சென்னை சைதாப்பேட்டை பணங்கள் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டுப்பாட்டை அறையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து இந்தப் பிரிவின் இலச்சினையையும். வெளியிட்டார்
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன்.
தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு
முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் முதன்மை வன உயிரின காப்பாளர் ஸ்ரீ சீனிவாசன் ரெட்டி.
முதன்மை தலைமை வன பாதுகாவலர் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றம் கட்டுப்பாட்டு பிரிவு ஆகாஷ்தீப்பருவா.
வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் இரா காஞ்சனா
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் மன பாதுகாவலர்
டி.வெங்கடேஷ்.
ஆகியோர் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️