முதுமலை பழங்குடி பிரதிநிதிகள் 38 பாகன்களை சந்தித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள்
குறைகளை கேட்டறிந்து
அனைவருக்கும் பரிசு வழங்கினார்.
உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள்
முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் இன்று மாலை வருகை தந்தார்.
நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் பார்வையிட்டார்.
முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அவர்கள்
ஆஸ்கர் விருது பெற்ற
தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து
பழங்குடி பிரதிநிதிகள் 38 பாகன்களை சந்தித்து
குறைகளை கேட்டறிந்தார்
அனைவருக்கும் பரிசு வழங்கினார்.
முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
அனைவரிடம் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்
இந்த நிகழ்வில்
வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
திருமதி. சுப்ரியா சாஹு, அவர்கள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுக்கு யானைகள் முகாமில் உள்ள உணவு அரங்கில் யானைகளுக்கு உணவு வழங்கும் முறைகள் கூறினார்
நிகழ்ச்சி முடிந்து, மாலை 4.40 மணிக்கு வாகன மூலம், மீண்டும், மசினகுடி சென்று, ஹெலிகாப்டர் மூலம், மைசூரு சென்றார்.
இந்த நிகழ்ச்சியில்
வனத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மதிவேந்தன். சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ராமச்சந்திரன்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
திருமதி. சுப்ரியா சாஹு,
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர்.
முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் வன பாதுகாவலர் வெங்கடேஷ்.
முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல. துணை இயக்குனர் வித்தியா.
முதுமலை புலிகள் காப்பக மசனகுடி வன கோட்டம் துணை இயக்குனர் அருண்குமார்.
கூடலூர் வன கோட்டை மாவட்ட வன அலுவலர் கொமு ஓம் கார்.
ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதம்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கே பிரபாகர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
காரையாறு ஸ்ரீ.சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி
கல்லூரி மாணவ மாணவிகள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்டம்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள திருக்குறுங்குடி முதல் கடையம் வரை அமைந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்த சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசத்திற்கும், காரையார் நீர்த்தேக்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
இக்கோயிலில்
ஆடி அமாவாசை பண்டிகை நாட்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி இக்கோயில் அய்யனாரை வழிபடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து
காரையாறு
ஸ்ரீ சொரிமுத்து அய்யானர் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 15ம் தேதி தொடங்கி 17ம் நிறைவடைகின்றது.
இந்த விழாவில் பங்கேற்க ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான நல்லூர். அரவன்குடியிருப்பு. குருவன்கோட்ட. குறிப்பன்குளம். காளத்திமடம். ஆண்டிபட்டி. கரும்பனூர்.
உள்ளிட்ட பல்வேறு பகுதியில்
இருந்து ஆயிரகணக்கான மக்கள் குடும்பத்துடன் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
வன உயிரினங்கள் நலன் கருதியும் சுற்றுச்சூழல் நலன் கருதியும்
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர்
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
ஆடி அமாவாசையையொட்டி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். நெகிழியால் ;உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு வரக்கூடாது மதுபாட்டில்கள் சிகரெட் பீடி புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் வனப்பகுதிக்குள் எடுத்துவர தடை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதை தொடர்ந்து
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (திருநெல்வேலி) கள
இயக்குனர் மற்றும்
வன பாதுகாவலர் மாரிமுத்து அறிவுறுத்தலின் பேரில்
களக்காடு முண்டாந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் வனக்கோட்டம்
துணை இயக்குனர்
செல்வி செண்பக பிரியா
உத்தரவின் பேரில்.
அந்தந்த வன சரகர்கள் மேற்பார்வையில்
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில்
நல்லூர் CSI பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ;வகையில்
நல்லூர் CSI
ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவ மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார்.
கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இருந்து பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். நல்லூர். அரவன்குடியிருப்பு. குறிப்பன்குளம். குருவன்கோட்டை. வழியாக ஆலங்குளம். முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆலங்குளம் புதிய பேரூந்து நிலையத்தில் சைக்கிள் பேரணி நிறைவடைந்தது.
ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சி முன்பு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.
இந்த பேரணியில் முண்டந்துறை புலிகள் காப்பகம்
வனச்சரக அலுவலர் கல்யாணி.
அம்பாசமுத்திரம் வனசரக அலுவலர் நித்யா.
பாபநாசம் வனசரக அலுவலர் சக்திவேல்
கடையம். வன சரக அலுவலர் கருணாமூர்த்தி.
ஆலங்குளம் உதவி ஆய்வாளர் மகேந்திரன் நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ரத்ததானம் கழக ஒருங்கிணைப்பாளர் ஜூலியன்ஸ் ராஜா சிங். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஜெயடேவிசன் இமானுவேல். ஜோகனா வனக்காப்பாளர்கள் பெருமாள். ரமேஷ் மரியராஜ் ரமேஷ் ராஜசுப்பிரியா. பெனசீர்.சங்கீதா. அப்துல் கபூர்.ஆறுமுக நயினார் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ஆலங்குளம் பசுமை இயக்கத்தினர்
பூ உலகை காப்போம் தன்னார்வலர்கள்; உள்பட பலர் கலந்து கொண்டனர்.
🌳 கே தமிழகம் சேட் ✍️