காரமடை பில்லூர்.அத்திகடவு மலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் ஆ.ராசா.MP தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....!!
இதில் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பழங்குடி கிராமங்களான அத்திக்கடவு, முள்ளி, குண்டூர், பூச்சிமரத்தூர், வீரக்கல், பில்லூர் உள்ளிட்ட 26.க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கான
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு மற்றும் தாட்கோ மூலம் தனி நபர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன், ஊட்டசத்து பெட்டகம் என சுமார்
ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா
அண்மையில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தினர்..
தூய்மை பணிக்காக புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக உபகரணங்கள் வாங்க என தங்களது தினசரி ஊதியத்தில் 50 ரூபாய் வரை பிடித்தம் செய்வதாகவும் இதனால் வருவாய் குறைந்து பாதிப்புகளை சந்தித்து வருவதாக கூறி அண்மையில் எனது அலுவலகத்தை
மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் காரமடை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்..
இது குறித்து தமிழக முதவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அவர்களிடம் உறுதி கூறினேன்..
அதன்படி முதல்வருடன் ஒன்றாக காரில் பயணிக்க வாய்பு கிடைத்த போது துப்புரவு பணியாளர்களின் பிரச்சனையை அவரிடம் எடுத்து கூறி இதனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்புள்ளது என்றேன்..
உடனடியாக இது குறித்து தொடர்புடைய அமைச்சர் மற்றும் அதிகாரிடம் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் இருபதே நிமிடத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இனி தனியார் ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் தினசரி பிடித்தம் செய்யும் 50 ரூபாயை இனி அரசே செலுத்தும் என முடிவெடேக்கப்பட்டு
தற்போது இதற்கான அரசு உத்திரவும் வழங்கப்பட்டு விட்டது என்றார்..
தொடர்ந்து மாநாடு பழங்குடியின மாணவ மாணவிகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளியில் ஆ.ராசா MP. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பழங்குடியினர் மக்கள் வாழ்க்கை முறை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில்
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி IAS..,
ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) இயக்குநர் மற்றும் வன பாதுகாவலர் திரு.இராம சுப்பிரமணியன் I.F.S.,
மாவட்ட வன அலுவலர் திரு.ஜெயராஜ் I.F.S.,
சமூகப் பாதுகாப்பு திட்டம்தனி துணை ஆட்சியர் சுரேஷ்.
வடக்குவருவாய் கோட்டாட்சியர் திரு.கோவிந்தன்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன். லட்சுமி பிரியா. நிர்மலா தேவி. கலைச்செல்வி. வட்டாட்சியர் சந்திரன். வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி. செந்தில்குமார். உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
இதன் பின்னர்
கலைஞர் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம் காரமடை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அத்திக்கடவு பகுதியில் காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான
ஆ. ராசா கலந்து கொண்டு 2000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேஷ்டி சேலை உட்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நிகழ்ச்சியில்கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி,தலைமை செயற்குழு உறுப்பினர்
டி .ஆர். சண்முகசுந்தரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் குரு பிரசாத் கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் மேட்டுப்பாளையம் நகருக்கு வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்.ஆ.ராசா,
20 வது வார்டு சுதா காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 29 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட விளையாட்டு பூங்காவை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர். நகர மன்றஉறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
🌳 கே தமிழகம் சேட் ✍️